29 C
Chennai
Sunday, January 29, 2023
Homeசினிமாவாரிசு 'ரஞ்சிதாமே 'க்கு போட்டியாக அஜித் செய்த தரமான சம்பவம் !!. இப்பவே...

வாரிசு ‘ரஞ்சிதாமே ‘க்கு போட்டியாக அஜித் செய்த தரமான சம்பவம் !!. இப்பவே பொங்கல் ரேஸ் ஆரம்பம்.

Date:

தொடர்புடைய கதைகள்

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு குறும்படத்தின் படப்பிடிப்பைக்...

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், மேலும் அவர் சமீபத்தில் வெளியான...

கெஞ்சிய நயன் நோ சொன்ன லைகா !! அஜித்...

அஜித்தின் 'துணிவு' படம் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிப் படமாக அமைந்துவிட்ட நிலையில்,...

தமிழகத்தில் வாரிசு VS துணிவு வசூலில் முதலிடத்தில் இருப்பது...

இயக்குனர் எச் வினோத்துடன் அஜித்தின் மூன்றாவது தொடர்ச்சியான படமாக 'துணிவு' குறிக்கப்பட்டது,...

காலில் பெரிய கட்டுடன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குஷ்பு…பதறிப்போன...

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு . மகாராஷ்டிராவில்...

டப்பிங் கலைஞர் சீனிவாச மூர்த்தியின் மறைவுக்கு சியான் விக்ரம்...

நடிகர்கள் அஜித், சூர்யா, விக்ரம் முதல் ஷாருக்கான் வரை இந்திய சினிமாவின்...

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் வீரா, அஜய், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும்.

பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசும் மோத காத்திருக்கிறது.இந்நிலையில், விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியான வேகத்தில், அஜித்தின் துனிவு படத்தில் இருந்தும் அப்டேட் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. ஹெச் வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், துணிவு இறுதிக்கட்ட பணிகளில் வேகமாக உள்ள படக்குழு, விரைவில் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதனிடையே அஜித்தின் பைக் டூர் புகைப்படங்களும், ரசிகர்களுடன் எடுத்துகொண்ட போட்டோக்களும் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. இதுவே துணிவு படத்திற்கு ப்ரோமோஷனாக அமைந்து வருகிறது.

அஜித்தின் துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது. இந்நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது. விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே என்ற அந்தப் பாடல், நாளை வெளியாகவுள்ளது. இதனால், சோஷியல் மீடியாஸ் முழுவதும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ ட்ரெண்டாகி வரும் நிலையில், அஜித்தின் துணிவு படத்தில் இருந்தும் தரமான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, துணிவு படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனால், அஜித் ரசிகர்கள் தற்போது செம்ம உற்சாகமாக காணப்படுகின்றனர். ஏற்கனவே துணிவு நாயகி மஞ்சு வாரியர் உள்ளிட்ட மேலும் சில நடிகர்கள் வாரிசு டப்பிங் பணிகளை முடித்துவிட்டனர். இப்போது அஜித்தும் டப்பிங்கை முடித்துவிட்டதால், வாரிசுக்கு டஃப் கொடுக்கும் வகையில் துணிவு பட அப்டேட்டும் வைரலாகி வருகிறது. மேலும், விரைவில் துணிவு டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் பற்றி படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் – விஜய் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவுள்ளதால் கோலிவுட்டே பரபரப்பாக காணப்படுகிறது.

முன்னதாக துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து உடனடியாக அஜித்தின் தரப்பில் இருந்து பதில் வந்தது. இதுகுறித்து ட்வீட் செய்திருந்த அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “ஒரு நல்ல படம் தன்னை தானே ப்ரோமோஷன் செய்துகொள்ளும்” என ஸ்மார்ட்டாக பதில் தெரிவித்திருந்தார். இதனால், துணிவு பட ப்ரோமோஷனுக்கு அஜித் வருவார் என்ற செய்திகள் பொய்யாகிவிட்டன. இந்நிலையில், துணிவு டப்பிங்கை அஜித் முடித்துவிட்டது, ரசிகர்களிடம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக இப்படத்தில் நடித்திருந்த முக்கிய கதாபாத்திரங்கள் டப்பிங் பேசி வந்த நிலையில், இன்று துணிவு படத்திற்காக அஜித் டப்பிங் பேசியுள்ளார்.

அஜித் டப்பிங் பேசும் பொழுது அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் முதல் முறையாக வெளிவந்து தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘துணிவு ‘ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழு சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வந்தாலும், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் நடந்து வருவதாக தெரிவித்திருந்தோம். இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முன்பு தனது போர்ஷன்களுக்கு டப்பிங் பேசிய நிலையில், தற்போது பிக் பாஸ் புகழ் அமீர் தனது போர்ஷன்களுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளனர் .

சமீபத்திய கதைகள்