Tuesday, June 6, 2023 10:24 pm

அஜித்தை தொடர்ந்து ஹச் வினோத்தின் அடுத்த பட ஹீரோ இவரா ? ரசிகர்கள் கொண்டாட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆடுகளம் பட புகழ் கிஷோர் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ஆடுகளம் புகழ் கிஷோரின் அடுத்த படம். முகை எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு...

லைசென்ஸ் படத்தில் ராஜலட்சுமிக்கு மட்டும் வேறு சாய்ஸ் இல்லை ! இயக்குனர் வைத்த நம்பிக்கை

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர்...

கால்பந்து வீரர் ரொனால்டோ ஸ்டைலில் அசத்தும் அஜித் மகன் ஆத்விக் : வைரல் புகைப்படம் இதோ !

அஜீத் குமார் கடந்த மூன்று தசாப்தங்களாக தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்....

மிகவும் எதிர்பார்த்த லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்?

பரபரப்பான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் numero uno இசையமைப்பாளர் அனிருத்...
- Advertisement -

நட்டி நட்ராஜ் நடித்த ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் தலையை மாற்றிய எச்.வினோத் தனது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் சில படிகள் மேலே சென்றார், அதில் கார்த்தியை உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட போலீஸ் அதிகாரியாக நடித்தார்.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் கமல்.இதனைத் தொடர்ந்து மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்தில் கமல் நடிக்கவுள்லதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கமலின் கால்ஷீட்டுக்காக அஜித் பட இயக்குநர்கள் இருவர் கதையோடு காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சில வருடங்களாக அரசியலில் பிஸியாக இருந்த கமல், விக்ரம் படத்தின் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார். ப்ளாக் பஸ்டர் ஹிட், 400 கோடி வசூல் என கோலிவுட்டின் தரமான செய்கையாக கமலின் விக்ரம் படம் பார்க்கப்படுகிறது. இதனால், மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வரும் கமல், அடுத்த படங்கள் குறித்தும் தீவிரமான டிஸ்கஷனில் இருந்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படத்தில் கமல் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கமல் எந்த இயக்குநரின் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. சில தினங்களுக்கு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்த இயக்குநர் லிங்குசாமி, கமல் சாருக்காக ‘மதி’ என்ற கதை ரெடியாக இருப்பதாகவும், இது ஏற்கனவே அவருக்காக எழுதிய ஸ்கிரிப்ட் தான் என்றும் கூறியிருந்தார். மேலும், சமீபத்தில் கமல் சாரை சந்தித்ததாகவும், அவர் விரைவில் சேர்ந்து பட பண்ணலாம் என சொன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் ஹெச் வினோத்தும் கமல்ஹாசனுக்காக ஒரு கதையை எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து அஜித்துடன் பயணித்து வரும் ஹெச் வினோத், அடுத்து விஜய் சேதுபதியின் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து கமல் நடிக்கும் படத்தை ஹெச் வினோத் இயக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லிங்குசாமி, ஹெச் வினோத் இருவருமே அஜித்துடன் பணிபுரிந்தவர்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் கமலுக்காக கதையுடன் காத்திருப்பது சபாஷ் சரியான போட்டி என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் விக்ரம் ட்ரெய்லை வெளியீட்டு விழாவில் பேசிய பா ரஞ்சித், கமல் சாருக்காக மதுரையை பின்னணியாகக் கொண்டு ஒரு கதை வைத்திருக்கிறேன் எனக் கூறியிருந்தார். கமலும் நிச்சயமாக அந்தப் படத்தில் சேர்ந்து வேலை பார்ப்போம், நீங்க கதையை ரெடி பண்ணுங்க என பா ரஞ்சித்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருந்தார். இந்நிலையில், இப்போது லிங்குசாமி, ஹெச் வினோத், பா ரஞ்சித் என மும்முனைப் போட்டி தொடங்கியுள்ளது. இதனிடையே விக்ரம் படத்தின் அடுத்த பாகமும் உருவாகும் என லோகேஷ் கூறியுள்ளார். ஆக இனி கமல் என்ன முடிவெடுப்பார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

துணிவு ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று எச் வினோத் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜிஎம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஜித்குமார், இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் இணையும் படம். படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்