Monday, April 29, 2024 4:14 pm

விவாகரத்து நடிகை நம்பி மோசமான லிங்குசாமி ? உண்மையிலேயே லிங்குசாமி மாட்டியது எப்படி தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பல கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை இயக்குனர் திருப்பி தராததால், இயக்குனர் லிங்குசாமி மீது பிவிபி கேபிடல் என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இயக்குனர் லிங்குசாமி, தயாரிப்பு நிறுவனத்திடம் கடன் வாங்கிய காசோலையை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் கடனை செலுத்தாததால் அவர் சரண்டர் செய்த காசோலை பவுன்ஸ் ஆனது.

இந்த வழக்கு சைதாப்பேட்டை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திராவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். ஆனால், சைதாப்பேட்டை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்ய லிங்குசாமி முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் அவருடைய சொந்த தயாரிப்பில் சூர்யா , சமந்தா நடிப்பில் வெளியான படம் அஞ்சான். படத்தில் நடித்த நடிகை சமந்தாவுடன் கிசுகிசுவில் சிக்கினார் லிங்குசாமி. இதனை தொடர்ந்து சமந்தா மீது கொண்ட மயக்கத்தில் அஞ்சான் படத்தில் கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டத்தில் விளைவாக, அஞ்சான் படம் மிக பெரிய தோல்வியை சந்தித்தது.

மேலும் மீண்டும் தான் சொந்த தயாரிப்பில் இயக்க இருக்கும் படத்திற்கு நடிகை சமந்தாவுக்கு வாய்ப்பு கொடுத்து, தன் அருகில் வைத்து கொள்ள முடிவு செய்த லிங்குசாமி. ஏற்கனவே நடிகர் கார்த்திகை வைத்து பையா படம் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்த லிங்குசாமி. அஞ்சான் படத்தை முடித்துவிட்டு கார்த்திக் மற்றும் சமந்தா நடிப்பில் எண்ணி ஏழு நாட்கள் என்கின்ற ப்ராஜெக்ட்டை தொடங்கினார்.

எண்ணி ஏழு நாட்கள் படத்திற்காக பி வி பி கேப்பிட்டல் என்ற நிதி நிறுவனத்திடம், ரூபாய் 1.30 கோடி கடன் பெற்றிருந்தார் லிங்குசாமி. ஆனால், திடீரென எண்ணி ஏழு நாட்கள் படம் கைவிடப்பட்டு, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல், அடுத்தடுத்து படங்களை எடுத்து வந்தார் லிங்குசாமி. இதனை தொடர்ந்து கடன் கொடுத்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை தொடர்ந்து லிங்குசாமி 1.30 கோடி பணத்திற்கான காசோலையை அந்த நிறுவனத்திற்கு வழங்கினார்.

ஆனால் வங்கியில் போதிய பணம் இல்லாமல், அந்த காசோலை திரும்பி வந்தது . இதை தொடர்ந்து லிங்குசாமி மீது பாதிக்கப்பட்ட நிறுவனம் மோசடி வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவர் சகோதரருக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது. இந்த நிலையில் சமந்தாவுக்காக எண்ணி ஏழு நாட்கள் படத்தை தொடங்கி அதற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல், சிறைக்கு செல்ல இருக்கின்றார் லிங்குசாமி என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் லிங்குசாமி கடைசியாக ராம் பொதினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்த ‘தி வாரியர்’ தமிழ்-தெலுங்கு இருமொழிகளை வழங்கினார், மேலும் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. முன்னதாக அல்லு அர்ஜுனுடன் ஒரு இருமொழி நாடகத்தை லிங்குசாமி அறிவித்தார், ஆனால் ஆரம்ப வெளியீட்டிற்குப் பிறகு படம் தொடரவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்