தனது ரசிகர்களுக்குகாக Ak 61 படத்தில் மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அஜித் !! மிரளும் திரையுலகம்

அஜீத் குமாரின் 61வது படமான ஏகே61 படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எச் வினோத், ஏகே மற்றும் போனி கபூர் காம்போ இந்த பேங்க் ஹீஸ்ட் த்ரில்லருக்கு மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்தனர். படத்திற்கு ‘வல்லமை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத் & சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

சமீபத்தில் நடிகர் அஜித் குமார் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகின.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார், படப்பிடிப்பு பாதுகாவலர் மோகன் கிரிசன் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோகன் பகிர்ந்து கொண்டுள்ளார். AK 61பட லுக்கில் டி சர்ட் அணிந்து அஜித் தோறறமளிக்கிறார்.

ஐரோப்பிய சுற்றுப்பயணம் & திருச்சி ரைஃபிள் கிளப் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு பிறகு அஜித்தின் புகைப்படங்கள் ரசிகர்கள் மூலம் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன.

AK61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் ‘அஜித் 61’ என்ற திரைப்படம் உருவாகவுள்ளது.

இந்த படத்திற்காக அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அஜித் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.அது மட்டும் இல்லாமல் புகைப்படத்தை பகிர்ந்த Technician பிரபல தனியார் பேட்டியில் கூறினார் இது தற்போது வைரலாகி வருகிறது ..

அஜீத் குமாருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும், வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், அஜய் மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க, ‘ஏகே61’ படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.