Friday, March 8, 2024 7:24 am

பக்கா காமெடி கதைக்களத்தில் அஜித்.! ரகளையான அடுத்தடுத்த அப்டேட் இதோ …!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித்குமார் நடித்த AK61 திரைப்படம் நாளை முதல் அதன் புதிய அட்டவணையுடன் முன்னேறத் தயாராக உள்ளது, தயாரிப்பாளர்கள் நாளை முதல் வைசாக்கில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 70% முடிந்துவிட்டது, மீதமுள்ளவை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமா “AK61” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை படக்குழு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், படப்பிடிப்பு இழுத்து கொண்டே செல்வதால், இந்த ஆண்டு இறுதியில் தான் முடிவடையும் போல் தெரிகிறது.

இதனை தொடர்ந்து, நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருட தொடக்கத்தில் அதாவது, ஜனவரி மாதம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குள் தனது ஏகே 61 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, அஜித்தின் ‘ஏகே 62’ திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் என்னெவென்றால், இந்த படத்தில் அஜித் காமெடியாகவும் ஜாலியாகவும் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இத்னால், ரசிகர்கள் தங்கள் நாயகனை பழைய பாணியில் பார்க்க ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். நடிகர் அஜித் முன்பு நடித்தது போல் ‘ஏகே 62’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023 கிறிஸ்துமஸ் அல்லது பொங்கலுக்கு படம் திரைக்கு வர உதவும் போஸ்ட் புரொடக்‌ஷன் திட்டங்களில் முழு கவனம் செலுத்தும் படக்குழு அடுத்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்