Friday, April 26, 2024 6:33 pm

பிசுறு தட்டாமல் 2வது நாளிலும் தட்டித் தூக்கிய விருமன்.. ஷங்கர் மகள் அதிர்ஷ்டமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த ‘விருமான்’ திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கார்த்திக்கு முதல் நாளில் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், படம் பார்வையாளர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்களைப் பெற்றுள்ளது. கிராமிய குடும்பப் படம் என்பதால் குடும்பப் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த படம்.

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கி உள்ள விருமன் படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகி உள்ள விருமன் படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் அதிகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் முத்தையாவின் வழக்கமான டெம்ப்ளேட் ஸ்டோரி என்றாலும், அதில் நடிகர் கார்த்தியின் கலகலப்பான நடிப்பு ரசிகர்களை படத்தை பார்க்கத் தூண்டுகிறது. ஆக்‌ஷன், காமெடி, டான்ஸ் என இந்த படத்தில் இறங்கி நடித்திருக்கிறார் கார்த்தி. இதே எனர்ஜியுடன் வந்தியத்தேவனாக கார்த்தி எப்படி மிரட்டப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் பொன்னியின் செல்வன் படத்துக்கும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய படங்கள் என்றாலே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து விடுவார்கள். இந்நிலையில், முதல் முறையாக அவரது மகள் அதிதி ஷங்கர் எப்படி நடித்து இருக்கிறார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் தியேட்டருக்கு திரண்டு வருகின்றனரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தேனாக தித்திப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் அதிதி ஷங்கர்.

25 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட விருமன் படத்திற்கு முதல் நாளிலேயே 7 முதல் 8 கோடி வரை வசூல் வந்தது படக்குழுவையும் தயாரிப்பு நிறுவனத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. போட்டியாக வெளியான அமீர்கானின் அந்த படத்துக்கு வரவேற்பு இல்லாத நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்களில் கூடுதல் காட்சி விருமன் படத்துக்கு கிடைத்துள்ளது.

சனிக்கிழமையான நேற்று முதல் நாளை விட அதிக வசூல் வந்துள்ளது விருமன் படக்குழுவினரை வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு வெளியான பல படங்கள் இரண்டாவது நாளில் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்த நிலையில், விருமன் திரைப்படம் இரண்டாவது நாளில் 8 முதல் 9 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தமாக 17 கோடி வரை இந்த படம் இரண்டே நாட்களில் வசூல் செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தியேட்டர்கள் திருவிழா போல காட்சியளிக்க உள்ளன. மேலும், நாளை சுதந்திர தின விடுமுறை என்பதால் விருமன் காட்டில் தங்க மழை தான் என்றே சொல்லலாம். முதல் வார முடிவில் விருமன் படம் 30 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், மனோஜ் பாரதிராஜா, வடிவுக்கரசி அமுங்கி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை போர் தி மோவே.

- Advertisement -

சமீபத்திய கதைகள்