24 C
Chennai
Thursday, February 9, 2023
Homeசினிமாஅஜித்தை வைத்து Super Hero படம் பண்ண நான் ரெடி !! வெளிப்படையாகப் பேசிய...

அஜித்தை வைத்து Super Hero படம் பண்ண நான் ரெடி !! வெளிப்படையாகப் பேசிய விருமன் திரைப்பட இயக்குநர்!!

Date:

தொடர்புடைய கதைகள்

ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா டிரைலர் இதோ !!

ஹன்சிகா மோத்வானி தனது திருமண படமான லவ் ஷாதி டிராமா ரிலீஸுக்கு...

போடுறா வெடிய ஏகே 62 படத்தை பற்றி...

‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ‘ஏகே 62’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள...

போகாதே ப்ரோமோ பாடல் கவின் தாதா இதோ !!

நடிகர்கள் கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகி வரும் தாதா...

ஒரே பிரேமில் இரண்டு ஜாம்பவான்கள்! ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினிகாந்த்...

இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்றான ஜெயிலரில் ரஜினிகாந்த் பணியாற்றி...

முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த ‘விருமான்’ திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கார்த்திக்கு முதல் நாளில் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், படம் பார்வையாளர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்களைப் பெற்றுள்ளது. கிராமிய குடும்பப் படம் என்பதால் குடும்பப் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த படம்.

திரையரங்குகளில் வெளியான ஒரே நாளில் ரூ.8 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வெளியான நாளில் ரூ.9 கோடி வசூலித்ததைத் தொடர்ந்து, ‘விருமன்’ தமிழ்நாட்டின் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்ததில் 8வது இடத்தில் உள்ளது.

25 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட விருமன் படத்திற்கு முதல் நாளிலேயே 7 முதல் 8 கோடி வரை வசூல் வந்தது படக்குழுவையும் தயாரிப்பு நிறுவனத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. போட்டியாக வெளியான அமீர்கானின் அந்த படத்துக்கு வரவேற்பு இல்லாத நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்களில் கூடுதல் காட்சி விருமன் படத்துக்கு கிடைத்துள்ளது.

சனிக்கிழமையான நேற்று முதல் நாளை விட அதிக வசூல் வந்துள்ளது விருமன் படக்குழுவினரை வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு வெளியான பல படங்கள் இரண்டாவது நாளில் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்த நிலையில், விருமன் திரைப்படம் இரண்டாவது நாளில் 8 முதல் 9 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தமாக 17 கோடி வரை இந்த படம் இரண்டே நாட்களில் வசூல் செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தியேட்டர்கள் திருவிழா போல காட்சியளிக்க உள்ளன. மேலும், நாளை சுதந்திர தின விடுமுறை என்பதால் விருமன் காட்டில் தங்க மழை தான் என்றே சொல்லலாம். முதல் வார முடிவில் விருமன் படம் 30 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் கார்த்தி, அதிதி சங்கர் தவிர பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், மனோஜ் பாரதிராஜா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது தமிழில் முன்னணி நடிகரான அஜித் சார் ஒரு லேஜண்ட் ஹீரோ அவர் ஒரு வாய்ப்புக் கொடுத்தா அவர் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு படம் பண்ண நான் ரெடியா இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

‘அஜித் 61’ முதலில் 2022 தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டது, ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் படத்தை பிற்பட்ட தேதிக்குத் தள்ளியுள்ளது, மேலும் படம் டிசம்பரில் வெளியாகலாம்.

அஜித் தனது 61வது படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், அதே நேரத்தில் படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், அஜய் மற்றும் சில பிரபலமான முகங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் முதன்முறையாக அஜித்திற்கு இசையமைக்கிறார், இது நிச்சயமாக இசையமைப்பாளரிடமிருந்து புதியதாக இருக்கும்.

சமீபத்திய கதைகள்