Friday, April 26, 2024 11:12 am

அந்த விஷயத்தில் அஜித்தும் எம்.ஜி.ஆரும் ஒண்ணுதான் !!கூறியது யார் தெரியுமா நீங்களே பாருங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித் தனது 61வது படத்திற்காக இயக்குனர் எச் வினோத்துடன் கைகோர்த்துள்ளார், மேலும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘அஜித் 61’ அல்லது ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜூன் தொடக்கத்தில் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்த பிறகு, படத்தின் முக்கிய படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தமிழ் நடிகர்கள் என்றாலே எம்ஜிஆர், சிவாஜி தான். இவர்களை தவிர்த்துவிட்டு தமிழ் நடிகர்களை பட்டியலிட முடியாது. அதற்கு காரணம் இவர்களின் திறமையான நடிப்பு என்றாலும் மற்றொரு புறம் திரையை தாண்டி இவர்கள் செய்த பல நற்செயல்கள் தான். திரையில் மட்டும் இன்றி நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் ஹீரோக்களாகவே வாழ்ந்துள்ளனர்.

அதிலும் எம்ஜிஆர் பலருக்கு உதவி செய்துள்ளாராம். அந்த வகையில் அவர் படக்குழுவினருக்கு செய்த உதவி குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி எம்ஜிஆர் நடிப்பில் வெளியான அன்பே வா படம் அனைவருக்கும் நினைவிருக்கும். இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் சிம்லா சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எம்ஜிஆர் அவரது சொந்த செலவில் ஸ்வொட்டர் வாங்கி கொடுத்தாராம். அதுமட்டுமல்ல இதுதவிர அங்கு தேவைப்பட்ட பெட்ஷீட் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அவர் சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் எப்போது படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றாலும் படக்குழுவினருக்கு ஏதாவது ஒன்று எம்ஜிஆர் வாங்கி கொடுக்காமல் இருக்கவே மாட்டாராம்.

தற்போது எம்ஜிஆர் வரிசையில் அடுத்த தலைமுறை நடிகர் ஒருவரும் இடம் பிடித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் ஹீரோ அஜித் தான். இவரும் நடிகர் எம்ஜிஆரை போலவே முகவரி படத்தின் படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றிருந்த போது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் ஜெர்கின் வாங்கி கொடுத்துள்ளார்.

ஒருத்தர் இரண்டு பேர் இல்லைங்க மொத்தமாக 135 பேருக்கு தனது சொந்த செலவில் ஜெர்கின் வாங்கி கொடுத்துள்ளார் அஜித். இதுதவிர அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்கும் தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அந்த விஷயத்தை நடிகர் அஜித் கடைபிடித்து வருகிறார். அஜித் வீரம் படத்தில் நமக்கு கீழ இருக்குறவங்கள நம்ம பார்த்துக்கிட்டா நமக்கு மேல இருக்குறவன் நம்ம பார்த்துப்பானு ஒரு டயலாக் பேசியிருப்பார்.

படத்தில் டயலாக் பேசியதோடு நிற்காமல் நிஜ வாழ்க்கையிலும் அதை கடைபிடித்து வரும் அஜித் உண்மையாவே ஹீரோ தாங்க. அதனால் தான் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்காங்க..

‘அஜித் 61’ முதலில் 2022 தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டது, ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் படத்தை பிற்பட்ட தேதிக்குத் தள்ளியுள்ளது, மேலும் படம் டிசம்பரில் வெளியாகலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்