Saturday, April 27, 2024 5:38 am

அடப்பாவிங்களா சுட்ட படத்துக்கு இவ்வளவு பில்டப்பா? கதை விசயத்தில் சர்ச்சையில் விருமன் படம்.

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

முத்தையாவின் இயக்கத்தில், மதுரை பின்னணியில் கிராமப்புற பொழுதுபோக்கு உருவாகிறது, மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், சூரி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், மேலும் இசையமைப்பாளர் படத்தில் வெளிப்படுத்த ஒரு சிறப்பு பாடல் இருப்பதால் படம் முழுவதும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.

கிராமத்து படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இயக்குனர் முத்தையா நடிகர் கார்த்தியை வைத்து கொம்பன் படத்திற்கு பிறகு விருமன் படத்தினை இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கரை அறிமுகப்படுத்தியும் இருக்கிறார்.

முதல் படமே அதிதி சங்கருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த நிலையில் இன்று படம் உலகம் எங்கும் வெளியாகவுள்ளது. 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வெளியாகும் நிலையில் கதை என்னுடையது என்று ஒரு இயக்குனர் புகாரளித்துள்ளாராம்.

என் கதையை திருடி முத்தையா வெளியிட்டுள்ளதாகவும் எழுத்தாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அதிதி சங்கர் பாடிய மதுர வீரன் பாடல் முதலில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பாடிய பாடல்.

பின் அவரை மாற்றி அதிதியை பாடவைத்துள்ளார் யுவன் என்ற சர்ச்சை எழுந்து தற்போது முடிந்த நிலையில் கதை திருட்டு புகாரில் தற்போது கடைசி நேரத்தில் வந்துள்ளது.

ஏற்கனவே கொம்பன் படமும் என்னுடையது என்ற் கதை திருட்டு சம்பவத்தை சந்தித முத்தையா இந்த படத்தையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியிடுவார் என்று பலர் கூறி வருகிறார்கள். மேலும் தற்போது விருமன் படத்தின் டைட்டில் கார்டு BGM அப்படியே மாஸ்டர் திரைப்படத்தின் BGM மாறியே உள்ளது. இதனால் தற்போது நெட்டிசன்கள் விருமன் பட BGM மாஸ்டர் காப்பி என பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்களோ அந்த மாஸ்டர் பட BGM-ஏ சென்னை 28 படத்தின் காப்பி தான் அது குறித்த வீடியோவை பரப்பி வருகின்றனர்.

இதற்கிடையில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் ‘விருமான்’ படத்தின் விரிவான விளம்பரங்களில் ஈடுபட்டுள்ளனர், மேலும் முன்னணி நட்சத்திரங்கள் பல்வேறு இடங்களில் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்