Viruman Movie Review :விருமன் திரைப்படம் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, அறிமுக நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சூரி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா மற்றும் மைனா நந்தினி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் படம் மதுரை பின்னணியில் உருவாகிறது
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
கதாநாயகன் {விருமன்} கார்த்தியின் கண்முன் அவரது தாய் {முத்துலட்சுமி} சரண்யா தீயில் எரிந்து மரணமடைகிறார். தனது தாயின் மரணத்திற்கு காரணம் தனது தந்தை பிரகாஷ் ராஜ் என்பதினால், சிறு வயதிலேயே தந்தையின் மேல் கோபம் கொண்டு கொலை செய்ய முயற்சி செய்கிறார் விருமன்.
ஆனால், மருமகனின் வாழ்க்கை வீணாகி விடுமோ என்று எண்ணி கார்த்தியை அவருடைய தந்தையிடம் இருந்து தனியாக அழைத்து செல்கிறார் தாய் மாமன் ராஜ்கிரண். பல வருடங்கள் கழித்து மீண்டும் தனது தந்தையை சந்திக்கும் கார்த்தி அதே கோபத்துடன் இருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க, தனது மூன்று பிள்ளைகளின் வாழ்க்கைக்கு எதுவும் செய்யாமல், தன்னை நம்பி மட்டுமே அவர்கள் பிழைக்க வேண்டும் என்று என்னும் பிரகாஷ் ராஜிடம் இருந்து தனது அண்ணன்கள் மூன்று போரையும் மீட்க போராடுகிறார் கார்த்தி. இந்த போராட்டத்தில் கார்த்தி என்னென்ன இன்னல்களை சந்தித்தார். தந்தையின் மேல் கார்த்திக்கு இருந்த கோபம் தணிந்ததா? என்பதே படத்தின் மீதி கதை..
கிராமத்து கதைக்களத்தில் வழக்கம் போல் நக்கல் கலந்த மாசான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் கார்த்தி. ஆக்ஷன், செண்டிமெண்ட், காதல், எதார்த்தம் என தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் தனி நிற்கிறார். கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள அதிதி ஷங்கரின் நடிப்பு ஓகே. நடனத்தில் பின்னியெடுக்கிறார்.
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அப்படியே மாறிவிடுகிறார் பிரகாஷ் ராஜ். மண்மணம் மாறாத நடிப்பில் மிரட்டியெடுக்கிறார் ராஜ்கிரண். சரண்யா பொன்வண்ணன், வடிவுகரசியின் அனுபவ நடிப்பு கச்சிதம். சூரியின் நகைச்சுவை ஓரளவு ஒர்கவுட் ஆகியுள்ளது. ஆர்.கே. சுரேஷ் சண்டைக்காக மட்டுமே படத்தில் வருகிறார். மற்றபடி மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், சிங்கம்புலி, மைனா நந்தினி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக செய்தியுள்ளனர்.
475 திரையரங்குகளில் வெளியாகி உள்ள கார்த்தியின் விருமன் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ரொம்ப நல்லா உள்ளதாகவும், முதல் நாள் வசூல் அமோகமாக இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். விக்ரம் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் வெளியான பல படங்கள் சொதப்பிய நிலையில், விருமனாவது தமிழ் திரையுலகை காப்பாற்றுகிறாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்
நடிகர்களின் நடிப்பு படத்திற்கு பலமாக இருந்தாலும், இயக்கம், திரைக்கதை இரண்டிலும் சொதப்பியுள்ளார் இயக்குனர் முத்தையா. காலம் கடந்துபோன கதைக்களம், பிற்போக்கு தனமான வசனங்கள் என சலிப்பு ஏற்படும் வகையில் அமைந்துள்ளது விருமன். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள், பின்னணி இசை படத்திற்கு பலம். செல்வகுமாரின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. வெங்கட்ராமின் எடிட்டிங் சூப்பர்.
கார்த்தி மற்றும் அதிதி ஷங்கரின் நடிப்பு அட்டகாசம் என்றும், தியேட்டரில் விருமன் படத்தின் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது என்றும், படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மேலும், பலர் விருமன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
“ எப்படியும் சவுத் சென்டர்களில் படம் களை கட்டும் என்பதில் ஐயமில்லை, படத்தில் வழக்கமான மாஸ் சீன்கள் இருக்கிறது. வழக்கமான காதல் சீன்கள் இருக்கிறது என்பதை எல்லாம் தாண்டி கதையும் வழக்கமான கதையாகவே இருக்கிறது “
விருமன் நியூஸ்டிக் மதிப்பீடு – 2.5/5விருமன்’
மேலும் இப்படம் கார்த்தியின் மிகப்பெரிய மற்றும் பரந்த வெளியீடாக இருக்கும். அறிமுக நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் பிளாக்பஸ்டர் இயக்குனர் ஷங்கரின் மகளின் நடிப்பில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
முத்தையாவின் இயக்கத்தில், மதுரை பின்னணியில் கிராமப்புற பொழுதுபோக்கு உருவாகிறது, மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், சூரி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், மேலும் இசையமைப்பாளர் படத்தில் வெளிப்படுத்த ஒரு சிறப்பு பாடல் இருப்பதால் படம் முழுவதும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.