Saturday, April 27, 2024 7:16 pm

தமிழ் திரையுலகமே எதிர்பார்த்த அஜித் 61 படத்தை பற்றிய அப்டேட் !! நாளை நமதே ரசிகர்கள் கொண்டாட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹெச்.வினோத் – அஜித் – போனி கபூர் காம்போ மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ஏகே 61. இந்த படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த இந்த படத்தின் சூட்டிங், ஜவ்வாக இழுப்பதால் அநேகமாக டிசம்பர் நோக்கி சென்று விடும் போல் தெரிகிறது. இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையாவது சீக்கிரம் விட வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சமீபத்தில், இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் வைத்து நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. எப்படியும் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று படக்குழுவிற்கு தெரியும் அதனால், என்ன நடக்க போவதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏகே 61 படத்தின் முக்கியமான காட்சிகள் ஐதராபாத்தில் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து புனேயில் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அஜித் ஃபாரின் டூர் புறப்பட்டு சென்றார். இந்த கேப்பில் அஜித் தவிர மற்ற நடிகர், நடிகைகளை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை டைரக்டர் வினோத் எடுத்து முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்து வரும் 61வது படத்தில் அவருடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் இரண்டு விதமான வேடங்களில் அஜித் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

அஜித் 61வது படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில் இந்த படத்திற்கு வல்லமை என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் , ஸ்ரீதேவியின் பிறந்த நாளான நாளை இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாகவும்தகவல் வைரலாகி வருகிறது. ஆனபோதிலும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் படக்குழு வெளியிடவில்லை.

அஜித் தனது 61வது படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், அதே நேரத்தில் படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், அஜய் மற்றும் சில பிரபலமான முகங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் முதன்முறையாக அஜித்திற்கு இசையமைக்கிறார், இது நிச்சயமாக இசையமைப்பாளரிடமிருந்து புதியதாக இருக்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்