Wednesday, March 27, 2024 10:15 pm

அமலாபால் நடித்த ‘கடாவர் ‘படத்தின் விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

Cadaver Movie Review இயக்குனர் அனூப் எஸ் பணிக்கரின் கேடவர், அமலா பால் நாயகியாக நடித்துள்ளார், ஆகஸ்ட் 12 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிடப்பட உள்ளது. புலனாய்வு திரில்லர் படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகை தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக நடித்துள்ளார்.

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘கடாவர்’. இதன் மூலம் முதன்முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார் நடிகை அமலாபால்.

அறிமுக இயக்குநர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அமலா பால், ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி இன்று முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஒன்லைன்…

மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ‘கடாவர்’. அதன் பொருள், மருத்துவர்கள் செயல்முறை படிப்பிற்காக பயன்படுத்தும் உயிரற்ற மனித உடல்.

கதைக்களம்…ஒரு நாள் காருக்குள் எரிந்த நிலையில் உள்ள ஒரு சடலத்தை கண்டுபிடிக்கின்றனர் போலீசார்.

அந்த கொலை வழக்கு ஒன்றினை போலீஸ் ஹரீஷ் உத்தமன் விசாரிக்கிறார்.. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா (அமலா) இணைகிறார். எப்படி கண்டுபிடித்தனர் என்பதே கதை.

அமலாபால் (Forensic pathology) தடயவியல் நோயியலில் சிறந்த மருத்துவராகவும், கிரிமினாலஜி படித்த போலீஸாகவும் காட்டப்படுகிறார்.

கேரக்டர்கள்…

வித்தியாசமான தோற்றம் வித்தியாசமான நடிப்பு என அசத்தியுள்ளார் அமலாபால்.. வழக்கமான நாயகி டூயட் என்று இல்லாமல் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை ஒரு தயாரிப்பாளராகவும் எடுக்க முன் வந்துள்ளதை பாராட்டியே ஆக வேண்டும்.

இதுவரை இல்லாத.. இதுவரை கொடுக்காத நடிப்பை கொடுத்துள்ளார் அதுல்யா ரவி. சின்ன வேடம் என்றாலும் அதற்காக மெனக்கெட்டுள்ளார்.

அதுபோலவே ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ரித்விகா, என எல்லோருமே தங்கள் நடிப்பில் கச்சிதம். அதுவும் ரித்விகாவுக்கு அப்பாவாக நடிக்க ஒப்புக்கொண்ட வினோத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

டெக்னீஷியன்கள்…

அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பொருத்தம்.

மருத்தவ கல்லூரியில் மனித உடல்களை வைத்து நடத்தப்படும் பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தது போல உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது.

ஆனால் மார்ச்சுவரியிலேயே நீண்ட நேரம் அமலா இருப்பதால் அவர் அங்கேயே சாப்பிடுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆரம்பம் முதல் இறுதிவரை பல ட்விஸ்ட்டுகளுடன் இந்த சஸ்பென்ஸ் கதை தொடர்கிறது. எனவே சஸ்பென்ஸ், த்ரில்லர் வகை பட விரும்பிகளை இந்த படம் கவரும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்