அடுத்த வருமான ரெய்டு இவரு வீட்டில் தான் !! கிசு கிசுக்கும் கோடம்பாக்கம்

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை கேட்ட பல தயாரிப்பு நிறுவனம் அணுகியுள்ளது. அதில் ஒன்று தான் புஷ்பா 2. ஆம், புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இதற்காக அவருக்கு 25 கோடி சம்பளமாக தரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிக்க 30 கோடி ரூபாயை விஜய் சேதுபதி சம்பளமாக வாங்கியுள்ளார். இதுமட்டுமின்றி தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திலும், விஜய் சேதுபதியை வில்லனாக கமிட் செய்துள்ளார்கள்.

இப்படத்தில் வில்லாக நடிக்க 25 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார். இந்த மூன்று படங்களும், கடந்த ஜூலை மாதம் தான் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்துள்ளாராம். இதன்முலம், ஒரே மாதத்தில் மொத்தமாக 80 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளார் விஜய் சேதுபதி.