ஜெயிலர் படப்பிடிப்பிற்காக டெல்லி புறப்பட்ட ரஜினிகாந்த்?

Jailer

நடிகர் ரஜினிகாந்த் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக படக்குழுவினர் டெல்லி சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. நடிகர், தேசிய தலைநகரில் இருந்து படப்பிடிப்புக்காக வேறு இடத்திற்குச் செல்வார் என்றும், சுமார் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை அங்கேயே தங்கிவிட்டு, பிறகு சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், அவரது வருகை குறித்து வேறு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

இதற்கிடையில், நெல்சனுடன் ‘ஜெயிலர்’ என்ற தலைப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது.