Friday, April 26, 2024 10:18 am

‘நான் ஈ’ சுதீப் நடித்த விக்ராந்த் ரோணா படத்தின் விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்த ‘விக்ராந்த் ரோனா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் பகுதியில், சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் வெளியீட்டை மதிப்பாய்வு செய்யப் போகிறோம்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 6 ரூபாயாக இருந்த ஒரு கற்பனை நகரத்தில் இந்த படம் அமைக்கப்பட்டது, இது பொதுமக்களின் வருத்தத்தை ஏற்படுத்தியது. அடர்ந்த மழைக்காடுகளுக்கு நடுவில் உள்ள ஒரு தொலைதூர குக்கிராமத்தில், இயற்கைக்கு அப்பாற்பட்டதாகக் கூறப்படும் மர்மமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பிரம்ம ராட்சசர்கள் என்று அழைக்கப்படும் தீய சக்திகள் குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக கொன்று வருகின்றன. விக்ராந்த் ரோனா (கிச்சா சுதீப்) என்ற போலீஸ்காரர் வருகிறார், அவர் விவரிக்க முடியாத கொலைகளை விசாரிக்க வேண்டும்.

இதற்கிடையில், பல தசாப்தங்களாக காணாமல் போன தனது மகனின் வருகைக்காக ஒரு வயதான மூதாட்டி காத்திருக்கிறார். ஒரு உயர்மட்ட திருட்டு மற்றும் வலிமிகுந்த கதாபாத்திரங்களின் தொகுப்பு ஆகியவை சதித்திட்டத்தின் மையத்தில் உள்ளன. இந்த இழைகள் எவ்வாறு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன, யார் குழந்தைகளைக் கொல்கிறார்கள் என்பது கதையின் மையமாக அமைகிறது.

இப்படி ஒரு ஊர், இப்படி ஒரு இடம் ஏதாவது வேற்று கிரகத்தில் இருக்கிறதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.படம் முழுவதையும் ஏன் இருட்டிலேயே காட்ட வேண்டும். பகல் காட்சிகளைக் கூட இருட்டாகவே காட்டுகிறார்கள். 3 டி படம் வேறு, பொதுவாகவே கண்களுக்கு அழற்சி ஏற்படும். அதில் இருட்டான காட்சிகளில் என்ன தெரிகிறது என்று உற்றுப் பார்த்து, உற்றுப் பார்த்து கண்கள் வலித்ததுதான் மிச்சம்.தன்னை விட ஜுனியர் நடிகர்கள் ‘கேஜிஎப்’ மாதிரியான படங்களில் நடித்து பிரபலமாவதைப் பார்த்து சுதீப்பும் இப்படி ஒரு பேன்டஸி படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் போலிருக்கிறது.

படத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி என்ன நினைத்து இந்தப் படத்திற்கக் கதை எழுதி இயக்கினாரோ,அவருக்கே வெளிச்சம்’ என்று சொல்லக் கூடாது ‘அவருக்கே இருட்டு’.கமரூட்டு என்ற மலைப் பிரதேச ஊருக்கு புதிய இன்ஸ்பெக்டராக வருகிறார் சுதீப். அங்கு சில குழந்தைகளும், சிலரும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். அவற்றைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அடுத்தடுத்து பல திருப்புமுனைகள்.

திடீர் திடீர் எனத் தோன்றும் பேய்கள், சில மர்ம உருவங்கள். அவற்றிற்கிடையில் கொலைகளுக்கான காரணத்தை அவர் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.படம் முழுவதும் சுருட்டு பிடித்துக் கொண்டே இருக்கிறார் சுதீப். ‘நான் ஈ’ சுதீப் என்ற பெயர் போய், ‘சுருட்டு சுதீப்’ என்று பெயர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொலைகளுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க தீவிரமான விசாரணையில் இறங்குகிறார்.

தனது சிறு மகளுடன் பல இடங்களுக்கும் செல்கிறார். ஒரு சிறு வயது மகளுடனா விசாரிக்கப் போவார் என்று கேள்வி எழுகிறது. அதற்கு கிளைமாக்சில் ஒரு காரணம் சொல்கிறார்கள். சுதீப் மீது மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை நகராதது மிகப் பெரிய மைனஸ் பாயின்ட்.படத்தில் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த கமரூட்டு ஊரில் உள்ள பெரிய புள்ளியாக மதுசூதன ராவ். அவரது மகனாக நிரூப் பண்டாரி, நிரூப் காதலியாக நீதா அஷோக் என இந்த கதாபாத்திரங்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். படத்திற்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்குகள் அசத்தலாக அமைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட் எதற்காக படம் முழுவதையும் இருட்டாகவே காட்டினார் என சொன்னால் நல்லது.

ஜாக்குலின் பெர்ணாண்டஸ் கவர்ச்சி நடனமாடும் ‘ரா ரா..’ பாடலில் அசத்துகிறார் இசையமைப்பாளர் அஜனீஷ். பின்னணி இசையும் பரவாயில்லை.படத்தில் மதுசூதன் வீடு, மற்றுமொரு மர்மமான வீடு, போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை மட்டுமே படத்தில் இடம் பெறுகின்றன. படத்தில் ஊரையோ, தெருக்களையோ காட்டவேயில்லை. அடிக்கடி காட்டுப் பகுதிகளை மட்டும் காட்டுகிறார்கள்.

அங்கெல்லாம் ஆட்களே அதிகமில்லை. ஆனால், ஒரு பெண் நடத்தும் சாராயக் கடையில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன லாஜிக்கோ ?.பேன்டஸி படமாகவும் இல்லாமல், பேய்ப் படமாகவும் இல்லாமல், த்ரில்லர் படமாகவும் இல்லாமல் என்னமோ ஒரு படமாக இருக்கிறது.விக்ராந்த் ரோணா – வேணா.

ஒரு கதையின் காமிக் புத்தக பாணியை விவரிக்கும் போது, ​​’விக்ராந்த் ரோனா’ சில நேரங்களில் அதன் எடையை விட அதிகமாக குத்துகிறது. கதை கண்டிப்பாக சராசரியாக உள்ளது, மேலும் முக்கியமான தருணங்களில் காட்சிகள் கற்பனையைத் தூண்டவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்