உண்மையிலேயே தி லெஜண்ட் வெற்றியா தோல்வியா?… முதல்நாள் வசூல் ரிப்போர்ட் இதோ !!

0
உண்மையிலேயே தி லெஜண்ட்  வெற்றியா தோல்வியா?… முதல்நாள் வசூல் ரிப்போர்ட் இதோ !!

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளர் சரவணன் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்துள்ளாட். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகி உள்ளனர். விளம்பர பட உலகில் முன்னணியில் திகழும் இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற பல திரைப்படங்கள் உருவாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

கோவிட் தொற்றுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தாமதமாகி இந்த ஆண்டு தொடக்கத்தில் முடிவுற்றது. இதையடுத்து படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு பிரம்மாண்டமாக சென்னையில் நடந்தது. அதன் பின்னர் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யும் பணிகளை படக்குழு மேற்கொண்டது. படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை முன்னணி விநியோக நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் செய்தது. அதுபோல இந்தியாவில் மேலும் 4 மொழிகளில் முன்னணி நிறுவனங்களால் ரிலீஸ் செய்யப்பட படம் நேற்று சிறப்புக் காட்சிகளோடு தொடங்கியது.

முதல் நாளில் நல்ல கூட்டம் இருந்தாலும் பலரும் Paid audience என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் மோசமான விமர்சனங்களுக்கு மத்தியில் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No posts to display