அப்பவே அரவிந்த்சாமி உடன் நடித்த அஜித்.! அதுவும் எந்த திரைப்படம் தெரியுமா.? நீங்களே பாருங்க !!

0
அப்பவே அரவிந்த்சாமி உடன் நடித்த அஜித்.! அதுவும் எந்த திரைப்படம் தெரியுமா.? நீங்களே பாருங்க !!

அஜீத்தின் தற்போதைய ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்தின் படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருவதால் அஜித் எப்போதும் சமூக ஊடக தளங்களில் ஆட்சி செய்து வருகிறார். இந்த மாத இறுதியில் அவர் வீடு திரும்புவார் என்றும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார்.ஹெச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தின் சூட்டிங்கில் மும்முரமாக பங்கேற்ற அஜித், இடையில் சிறிது கேப் எடுத்துக் கொண்டு வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் ஆரம்ப காலகட்டத்தில் பல இன்னல்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து தான் தற்போது இந்த இடத்தை பிடித்து ஜொலிக்கின்றனர் அந்த வகையில் ரஜினியின் தளபதி படத்தில் நடித்து அறிமுகமானவர் அரவிந்த்சாமி.

ஆள் பார்ப்பதற்கு செம அழகாக இருப்பதால் ரசிகர்களை எடுத்தவுடனேயே கவர்ந்து இழுத்தார். மேலும் இவரது ரசிகர்கள் செல்லமாக சாக்லேட் பாய் என அழைத்த காலமும் உண்டு ஆரம்ப காலகட்டத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் பெரிதும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு காலங்கள் போக போக பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது இதனையடுத்து சில வருடங்கள் சினிமா உலகில் இருக்கிறாரா இல்லையா என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் ஒரு கட்டத்தில் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

ஜெயம் ரவி அண்ணன் இயக்குனர் ராஜா ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் மாறி மாறி நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

இப்படி திரை உலகில் ஓடிக்கொண்டிருந்த அரவிந்த்சாமி அஜித்துடன் இணைந்து ஆரம்ப காலகட்டத்தில் நடித்துள்ளாராம். நீங்கள் பல தடவை பார்த்த பாசமலர்கள் படத்தில் அரவிந்த்சாமி, ரேவதி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் அந்த படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் அஜித்தும் நடித்திருப்பார்.

இது பல பேருக்கு தெரியவே தெரியாது இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் அரவிந்த்சாமி தெரிவித்தார் மேலும் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அப்பொழுது மீண்டும் நீங்கள் இப்பொழுதும் அஜித்துடன் இணைந்து நடிப்பீர்களா என கேட்டனர். நல்ல கதைகளம் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் நான் அஜித்துடன் இணைந்து நடிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

No posts to display