தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ படத்தை பற்றிய ஸ்பெஷல் அப்டேட் !! இதோ

0
தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ படத்தை பற்றிய  ஸ்பெஷல் அப்டேட் !! இதோ

நடிகர் தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார்.

இந்த படத்தின் மூலம் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தனது தம்பி தனுஷை இயக்கி முடித்துள்ளார். இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை இந்துஜா நடித்துள்ளார். வழக்கமாக செல்வராகவன் படங்கள் போல இல்லாமல் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

படத்துக்கு தனுஷே கதை எழுதியுள்ளார். இந்நிலையில் படத்தின் பின் தயாரிப்பு வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. வரும் ஜுலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தனுஷுடன் செல்வராகவனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display