ஒல்லி நடிகரை வச்சி செஞ்ச ஹாலிவுட் காரர்கள்…. தி கிரே மேன் பாத்துட்டு கடுப்பாகும் ரசிகர்கள்!

0
ஒல்லி நடிகரை வச்சி செஞ்ச ஹாலிவுட் காரர்கள்…. தி கிரே மேன் பாத்துட்டு கடுப்பாகும் ரசிகர்கள்!

தி கிரே மேன் படத்தில் தனுஷுக்கு அதிக காட்சிகளோ முக்கியத்துவமோ இல்லாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார். அதே போல கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது தி கிரே மேன் படத்தில் நடித்ததன் மூலம் ஹாலிவுட்டில் கால்பதித்துள்ளார்.

தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளனர் அவெஞ்சர்ஸ் புகழ் ரஸ்ஸோ பிரதர்ஸ். ரியான் ரோஸ்லிங் கதாநாயகனாகவும், கிறிஸ் இவான்ஸ் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளனர். படத்தில் தனுஷ் ஒரு அடியாள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு படத்தில் மொத்தமே 2 காட்சிகள்தான். நான்கு வசனங்கள்தான். இதனால் தனுஷுக்காக இந்த படத்தைப் பார்த்துள்ள இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

படத்தின் டீசர் வெளியான போதே அதில் தனுஷுக்கு அதிக காட்சிகள் இல்லை. இது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. இந்நிலையில் இப்போது படத்திலும் தனுஷுக்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால் படத்தை இந்தியாவில் தனுஷை வைத்து அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது போல மார்க்கெட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display