Sunday, April 28, 2024 7:29 pm

சாம் ஜோன்ஸ், ஆனந்தி நடித்த நதி படத்தின் திரைவிமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘நதி’ படத்தில் சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, கருப்பழனியப்பன், முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். ‘நடி’ இயக்கத்தை கே. தாமரைச்செல்வன் நிராகரித்தார், சாம் ஜோன்ஸ் பெருமைப்படுகிறார்

மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் தாமரை செல்வன் இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, கரு பழனியப்பன் , மைக் செட் ஸ்ரீராம், வேலா இராமமூர்த்தி, ஏ வெங்கடேசன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “நதி”. மதுரையை பின்னணி கொண்ட இப்படம், வழக்கமான மதுரை படமாக இருக்கிறதா அல்லது மாறுபட்டு தனித்து நிற்கிறதா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.

கதைப்படி,நாயகன் சாம் ஜோன்ஸ் கல்லூரி மாணவர். ஆட்டோ ஓட்டும் அப்பா, வீட்டை பார்த்துக் கொள்ளும் அம்மா மற்றும் பள்ளி செல்லும் தங்கை என எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் சாம் ஜோன்ஸ். அவருடன் கல்லூரி படித்து வருகிறார் கயல் ஆனந்தி. கட்சியிலும் சரி, ஊரிலும் சரி பெரியவராக இருந்து வருபவர் வேலா ராமமூர்த்தி. இவரது தம்பியாக வருபவர் ஏ வெங்கடேசன். வெங்கடேசனின் மகளாக வருபவர் தான் கயல் ஆனந்தி.

கல்லூரியில் நண்பர்களாக பழகி வருகின்றனர் சாம் ஜோன்ஸ் மற்றும் கயல் ஆனந்தி. ஆனால், கரு பழனியப்பன் குடும்ப பகை காரணமாக வேலா ராமமூர்த்தியை பழி வாங்க, சாம் மற்றும் ஆனந்தி இருவரும் காதலிக்கிறார்கள் என்று வதந்தியை கிளப்பி விடுகிறார். வேலா ராமமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தார்கள் சாம் ஜோன்ஸ் மீது கொலைப் பழியை சுமத்தி அவரை ஜெயிலில் அடைத்து விடுகிறார்கள்.

அதன்பிறகு சாம் ஜோன்ஸ் குடும்பம் என்ன ஆனது.? கயல் ஆனந்திக்கு உண்மை தெரிந்து அவர் என்ன செய்தார்.? கரு பழனியப்பனின் சூழ்ச்சி எதுவரை சென்றது.? என்பது படத்தின் மீதிக் கதை.

நாயகன் சாம் ஜோன்ஸ், தனது கேரக்டரை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். கயல் ஆனந்தியுடனான கெமிஸ்ட்ரி சுத்தமாக எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மைக் செட் ஸ்ரீராம் மற்றும் ஹீரோ இருவரும் தோன்றும் காட்சிகளை நன்றாகவே ட்ரிம் செய்திருக்கலாம். நீளமாவது சற்று குறைந்திருக்கும். முதல் பாதியில் திரைக்கதை படு நிதானமாக சென்று சோதனை செய்துள்ளனர்.

தனக்கான கதாபாத்திரத்தை வழக்கம் போல் நன்றாகவே செய்திருக்கிறார் கயல் ஆனந்தி. நண்பர்கள் இல்லை காதல் என்று சொல்லும் இடம், கல்லூரி ஜாலி வாழ்க்கை, ஹீரோவுடன் க்ளைமாக்ஸ் காட்சி என ஆங்காங்கே கைதட்டல் கொடுக்கும் அளவிற்கு ஒரு சில இடங்களில் தனது திறமையை கொடுத்திருக்கிறார் கயல் ஆனந்தி.

வேலா ராமமூர்த்திக்கு கொடுக்கப்பட்ட ஒரு டயலாக்கை படம் முழுக்க சொல்லி விட்டுச் செல்கிறார். ”அது என்னடா பொண்ணு மேல கை வைக்கிற பழக்கம்.”…
தோன்றும் எல்லா படத்திலும் அதே சவுண்ட் தானா வேலா ராமமூர்த்தி சார்.? கொஞ்சம் மாத்திக்கலாமே.

ஏ வெங்கடேசன் சொல்லிக் கொள்ளும் அளவிற்கான பெரிதான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. கரு பழனியப்பனின் ஒரு சில டயலாக் கைதட்ட வைத்திருந்தன. கரு பழனியப்பனுக்கு அந்த “விக்” தேவைதானா இயக்குனரே.?

முனீஸ்காந்த் சற்று மாறுபட்ட கதாபாத்திரம் தான். உணர்ந்து நடித்திருக்கிறார்.

மதுரையை சுற்றி ஒரு ரவுண்ட் அடித்து வரும் அளவிற்கு காட்சிகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்,

திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை ஓகே ரகம் தான்.

“மாஸ்டர்” படத்தில் விஜய் சேதுபதிக்காக வைக்கப்பட்ட பின்னணி இசையை தத்ரூபமாக கரு பழனியப்பனுக்கும் கொடுத்து அசத்தியிருக்கிறார் திபு நினன் தாமஸ். இசையமைப்பாளர் இன்னமும் மாஸ்டர் படம் பார்த்திருக்கமாட்டார் போல..

ஆங்காங்கே பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் கதையில், அவ்வப்போது நின்று நின்று சென்று நம்மை களைப்படைய வைத்துவிட்டார் இயக்குனர். இடைவேளை காட்சி எதிர்பார்க்காத ஒன்று.

நீளத்தை சற்று குறைத்து, திரைக்கதையில் சற்று நாட்டம் செலுத்தியிருந்தால் நதி நன்றாகவே பயணப்பட்டிருக்கும்.

நதி – வேகம் இல்லை…

- Advertisement -

சமீபத்திய கதைகள்