வலிமை படத்தை விட AK 61 படத்தில் அது கொஞ்சம் தூக்கலாக இருக்கும் !! நீங்களே பாருங்க புரியும்

0
வலிமை படத்தை விட AK 61 படத்தில் அது கொஞ்சம் தூக்கலாக இருக்கும் !! நீங்களே பாருங்க புரியும்

இயக்குனர் எச் வினோத் அஜித்துடன் மூன்றாவது தொடர்ச்சியான படத்திற்காக இணைந்துள்ளார், இது நடிகரின் 61வது படமாகும், மேலும் படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் அஜித் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அஜித் 61 படப்பிடிப்பு ஏப்ரல் 9ம் தேதி தொடங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில். அஜித் இந்த திரைப்படத்தில் இரண்டு ரோல்களில் பண்ண இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சண்டைக் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ள இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் ஸ்டன்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் இணைந்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. வலிமை திரைப்படத்தில் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருந்தது போல் இந்த திரைப்படத்திலும் மாஸ் ஸ்டன்ட் காட்சிகள் அமையும் என தெரிகிறது.

மேலும் வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தை போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார். திரைப்படம் முழுக்க முழுக்க வங்கி கொள்ளையை மையமாக வைத்து படம் உருவாகும் எனவும் படம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக போகும் எனவும் கூறப்படுகிறது.

Ak61

மேலும் இந்த திரைப்படத்தில் இணையும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

‘ஏகே 61’ படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா மற்றும் அஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், மேலும் இப்படம் ஒரு திருட்டு த்ரில்லர் என்று கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார், இது அஜித்திற்கு அவரது முதல் படம்.

No posts to display