ஒரு சில காரணங்களால் அஜித் கைவிடப்பட்ட 11 படங்கள் லிஸ்ட் இதோ !

0
ஒரு சில காரணங்களால் அஜித் கைவிடப்பட்ட 11 படங்கள் லிஸ்ட் இதோ !

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாக சில திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற வருகிறது.

கடைசியாக இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இத்திரைப்படத்தினை எச்.வினோத் இயக்குகிறார்.

ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படத்தினை எச்.வினோத் இயக்கிய நிலையில் மூன்றாவது முறையாக அவருடைய இயக்கத்திலேயே அஜித் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இவர்களின் கூட்டணியில் உருவாகி வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மேலும் திரைப்படத்தினை போனிகபூர் தயாரிக்க மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியார் அஜித்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படம் இந்த வருட தீபாவளியன்று வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. நாள்தோறும் இத்திரைப்படத்தினை பற்றிய தகவல்களும் நாள்தோறும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் மற்ற நடிகர்கள் போலவே சூப்பர் ஹிட் திரைப்படங்களையும் தவறவிட்டு இருக்கிறார். அதேபோல சில படங்களில் குறுகிய காலம் வரை நடித்துவிட்டு அதன் பிறகு கைவிட்ட திரைப்படங்களும் இருக்கிறது. தற்பொழுது 8 திரைப்படங்கள் லிஸ்ட் வெளியாகிவுள்ளது.

1. சாருமதி :

அஜித்தால் பாதி படப்பிடிப்பில் திடீரென கைவிடப்பட்ட முதல் படம் இதுதான். ஆனால், அதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார்.

2. நியூ

அஜித், ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு, 2000-ஆம் ஆண்டு ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிடப்பட்டு இருவரும் திடீரென விலகினர். பின் சிம்ரன் ஜோடியாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவே நடித்து 2004-ல் வெளியானது.

3. நந்தா

1999-ல் சேது வெற்றியைத் தொடர்ந்து 2001-ல் நந்தா படத்தை அறிவித்தார் இயக்குநர் பாலா. முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணத்தால் பின்னர் சூர்யா இதில் நடித்தார்.

4. இதிகாசம்

சிட்டிசன் வெற்றியையடுத்து சரவண சுப்பையாவுடன் மீண்டும் இணைந்தார் அஜித். வரலாற்றுப் பின்னணியில் இதிகாசம் எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இந்தப் படம் முற்றிலும் கைவிடப்பட்டது.

5. எறுமுகம்

சரணுடன் 3-ஆவது முறையாக இணைந்து, 40 சதவீத காட்சிகளும் படமாக்கப்பட்டு, கதையில் திருப்தி இல்லையென்று கூறி விலகினார் அஜித். பின்னர் விக்ரம் நடிப்பில் ஜெமினியாக வெளியாகி வெற்றிபெற்றது.

6. மகா

போலீஸ் அதிகாரியாக த்ரில்லர் வகையான இந்த கதையின் படப்பிடிப்பு 8 நாட்கள் நடந்தது. அப்போது அஜித் காலில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வர சில காலம் ஆகும் என்பதால் படம் கைவிடப்பட்டது.

7. திருடா

மருத்துவர் வேடத்தில் அஜித் பங்கேற்று சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்னர் இந்தப் படமும் கைவிடப்பட்டது. பின்னர் இதே கூட்டணி ஜனா திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது.

8. மிரட்டல்

ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணைந்தார் அஜித். ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ஆனால், மொட்டை அடிக்க வேண்டும் என்பதால் இதிலிருந்தும் விலகினார் அஜித். பின் கஜினியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது.

No posts to display