சிரித்த முகத்துடன் சென்னை திரும்பினார் அஜித் !! வைரலாகும் வீடியோ இதோ

0
சிரித்த முகத்துடன் சென்னை திரும்பினார் அஜித் !! வைரலாகும் வீடியோ இதோ

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ஏகே61 திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூருடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பேங்க் ஹீஸ்ட் த்ரில்லரில் இணைந்து பணியாற்றினார். லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார்.ஹெச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தின் சூட்டிங்கில் மும்முரமாக பங்கேற்ற அஜித், இடையில் சிறிது கேப் எடுத்துக் கொண்டு வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதையடுத்து அஜித் இல்லாமல் ஏகே 61 படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் மற்றும் போனிகபூருடன் இணைந்து ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. வரும் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது டிசம்பர் ரிலீசாக படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஐதராபாத்தில் இந்தப் படத்திற்கான பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டன. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதால் மவுண்ட் ரோடு மற்றும் பேங்க் செட்கள் போடப்பட்டு படத்தின் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடத்தப்பட்டது.

இதனிடையே அடுத்தக்கட்ட சூட்டிங் புனேவில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கெட்டப்புகளில் அஜித் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அவரது ஒரு கெட்டப் நீண்ட தாடி, காதில் கடுக்கனுடன் காணப்பட்ட நிலையில், அடுத்த கெட்டப் மிகுந்த ரகசியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

Ak fans

இந்தக் கெட்டப்புடன் அஜித் புனேவில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் மஞ்சுவாரியர், ஜான் கொக்கன், வீரா, அஜய் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் புனேவில் நடைபெறும் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளனர். மஞ்சுவாரியர் -அஜித் காம்பினேஷன் காட்சிகளும் இங்கு நடைபெறவுள்ளன.

ஐரோப்பா சுற்றுப்பயணம்இதனிடையே, இந்த சூட்டிங் துவங்குவதற்கு முன்னதாக சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அஜித். இந்த சுற்றுப்பயணத்தின்போது பைக் ரேசிங் மற்றும் குடும்பத்தினர், ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் அவர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். அவர் விமானநிலையத்திற்கு வந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்நிலையில், அவர் அடுத்த வாரத்தில் புனேவில் நடைபெறும் ஏகே61 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் சில மாதங்களாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் டைட்டிலைக்கூட அறிவிக்காமல் படக்குழு மௌனம் சாதித்து வருகிறது. படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்தப் படத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து ரசிகர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார் அஜித்.

No posts to display