Friday, April 26, 2024 1:37 pm

நம்பர் நடிகைக்கு 25 கோடி திரும்பக் கேட்டு நெட்பிளிக்ஸ் நோட்டீஸ் ? அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையான நயன்தாரா அவரது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.

சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிக விமரிசையாக அந்தத் திருமணம் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண நிகழ்வுகளை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை.

உள்ளே அனுமதிக்காமல் வெளியில் நிற்க வைத்தாலும் கூட, சில செய்தி சேனல்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாலையில் நின்று கொண்டு வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

ஓடிடி தளத்திற்கு தங்களது திருமணம் பற்றிய நிகழ்வை நிகழ்ச்சியாக்கி பெரிய தொகைக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் விற்றுவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. அதற்கேற்றபடி திருமணம் நடந்து முடிந்ததும் ஒரு சில புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டனர்.

வந்து வாழ்த்திய பிரபலங்களின் புகைப்படங்கள் சிலவற்றை ஒரு மாதத்திற்குப் பிறகு மட்டுமே வெளியிட்டார்கள்.அவர்களது திருமணம் ஓடிடியில் வரும் என்று சொல்லப்பட்டது போல இதுவரை வரவில்லை. இதனிடையே, அந்த உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அதற்காக தாங்கள் அளித்த 25 கோடியைத் திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

தங்கள் அனுமதி இல்லாமல் பிரபலங்கள் வாழ்த்திய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்ட காரணத்தால், அவர் ஒப்பந்தத்தை மீறியதாக நெட்பிளிக்ஸ் குற்றம் சாட்டியுள்ளதாம். மேலும், நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண செலவு மொத்தத்தையும் நெட்பிளிக்ஸ் பார்த்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

திருமண ஏற்பாடுகள், மணமேடை, மணம் நடந்த இடத்தின் அலங்காரம், பிரபலங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல்கள் செலவு, செக்யூரிட்டி, ஒருவருக்கான திருமண உணவு செலவு 3500 ரூபாய் என அனைத்திற்கும் நெட்பிளிக்ஸ் செலவு செய்ததாம்.

இதுவரை இப்படி ஒரு ஸ்பான்சர்ஷிப் திருமணத்தை தமிழ் சினிமா உலகம் கேள்விப்பட்டதில்லை. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் இது குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரிய வரும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்