மனசுல அடுத்த அஜித் விஜய்ன்னு நினைப்பு பத்திரிகையாளரிடம் கொந்தளித்த சூர்யா.! இதுதான் அந்த சம்பவம்.

0
மனசுல அடுத்த அஜித் விஜய்ன்னு நினைப்பு பத்திரிகையாளரிடம் கொந்தளித்த சூர்யா.! இதுதான் அந்த சம்பவம்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித்துக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் வைத்திருந்தவர் நடிகர் சூர்யா.

இவரது நடிப்பில் வெளிவந்த கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல், வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் ஆகிய படங்கள் இவருக்கு தொடர் வெற்றிகளை கொடுத்தது.

இதனாலே சூர்யாவின் மார்க்கெட் 2007-லிருந்து 2009-ஆம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்தது. பல ரசிகர்கள் ரஜினி, கமலுக்கு பிறகு சூர்யா தான் என அந்த காலத்திலேயே கூறினார்கள். ஆனால், அஞ்சான் படத்திலிருந்து சூர்யாவுக்கு தோல்வி ஆரம்பித்தது.

அஞ்சான் படத்திற்கு பிறகு வெளியான மாஸ்,பசங்க 2, தானா சேர்ந்த கூட்டம், காப்பான் படங்கள் சூர்யாவிற்கு தோல்வியை கொடுத்தது. பிறகு எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி ஓரளவு நல்ல வெற்றியை கொடுத்தது.

ஆனால், இப்போது விஜய், அஜித்திற்கு பிறகு தான் சூர்யா இருக்கிறார். அஜித், விஜய் இருவரும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கவே மாட்டார்கள், இதனால் செய்தியாளர்கள் பலர் அவர்களை நேரில் பார்த்தால் கூட, எந்த கேள்விகளும் கேட்கமாட்டார்கள்.

இந்நிலையில், அண்மையில், சூர்யாவிடம் ஒரு முன்னணி பத்திரிக்கையாளர் ஒரு பேட்டி கொடுக்க முடியுமா என கேட்டுள்ளாராம். அதற்கு மிகவும் கடுப்பான சூர்யா இந்த பேட்டியை விஜய் – அஜித் கிட்ட கேப்பீங்களா.? என்கிட்ட மட்டும் கேக்குறீங்க? என கொந்தளித்து விட்டாராம். இதனை பிரபல சினிமா பத்திரிகை யு-டியூப் சேனல் வலைப்பேச்சு ஒரு வீடியோவில் குறிப்பிட்டு இருந்தனர்.

No posts to display