இந்த ஒரு காரணத்தினால் பாதியில் நின்ற ரிச்சர்ட் திருமணம் அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை !! பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !!

0
இந்த ஒரு காரணத்தினால் பாதியில் நின்ற ரிச்சர்ட் திருமணம் அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை !! பலரும் அறியாத உண்மை தகவல் இதோ !!

திரௌபதி திரைப்படம் மூலமாக மீண்டும் ரசிகர்களை சேர்க்க தொடங்கியுள்ளார் ரிச்சர்ட் ரிஷி. காதல் திருமணங்கள், திருமணம் போலி பதிவுகள் போன்றவற்றை அலசியுள்ள திரௌபதி திரைப்படத்தின் நாயகன் ரிச்சர்ட் ரிஷியின் திருமண விவகாரத்தில், தல அஜித் பல முடுவுகளை எடுத்துள்ளார்.

நடிகையும், நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் ரிஷி அவர்களுக்கு வயது 40 ஆகிறது, ஆனால் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார். அவர் இன்று வரை சிங்கிளாக இருப்பதற்கு சோகமான ப்ள்ஷ்பேக் உள்ளது.

ரிச்சர்ட் அவர்களின் தந்தை பாபுவுக்கு சினிமா தொடர்பான பெரிய குடும்பங்கள் பலவற்றுடன் நல்ல நட்பு உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பாடலாசிரியர் குடும்பத்துடனும் நல்ல நட்பு இருந்ததுள்ளது. இருவீட்டாரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள். அந்தப் பாடலாசிரியரின் வாரிசோடு ரிச்சர்டு காதல் வசப்பட்டுள்ளார். அந்த காதல் அடுத்தகட்டமாகத் திருமணத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தமும் நடந்ததுள்ளது. அஜித் முன்நின்று நடத்தியுள்ளார். ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த கொஞ்ச நாள்களில் அந்தப் பெண்ணுக்கும் ரிச்சர்டுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்ற பிரச்சனைகள் உருவானதாக தெரிவிக்கின்றனர். இருவருக்கு இடையிலும் பிளவு ஏற்ப்பட, அஜித் இருவரையும் அழைத்து சமாதானம் பேசியிருக்கிறார் ஆனாலும், தீர்வு ஏற்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

ஒருகட்டத்தில் ரிச்சர்டு குறித்து பெண்ணின் வீட்டார் பல விஷயங்களை அஜித்திடம் சொல்ல, அதற்கு அஜித் `நான் அந்த வீட்டுக்கு மருமகன்தான், அந்த வீட்டுல என்னுடைய மாமனார் மாமியார் பெரியவங்கன்னு இருக்காங்க எனவும், அதனால் ரிச்சர்ட் குறித்து எந்த விஷயம்னாலும் முடிவெடுக்க வேண்டியது என் மாமனார் மாமியார்தான். அதனால் நீங்க அவங்ககிட்டப் பேசுறதுதான் சரியா இருக்கும்’ எனக் கூறிவிட்டு இந்த விவகாரத்தில் இருந்து விலகியிருக்கிறார் தல அஜித்.

குடும்பமாக இருந்தாலும் தன்னுடைய லிம்ட் என்னவென்று தல அஜித் அவர்களுக்கு சரியாக தெரிந்து இருக்கிறது என இந்த செய்தியை அறிந்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதை தொடர்ந்து கல்யாண ஏற்பாடுகள் கைவிடப்பட்டு நிச்சயதார்த்தத்துடனேயே நின்றுவிட்டது. ஆனால், ரிச்சர்டும், அந்தப் பெண்ணும் இன்னும் வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.

No posts to display