இந்த ஒரு காரணத்தினால் கொரோனா குமார் படத்தில் இருந்து விலகிய சிம்பு ? அப்ப புதிய ஹீரோ இவரா ?

0
இந்த ஒரு காரணத்தினால் கொரோனா குமார் படத்தில் இருந்து விலகிய சிம்பு ? அப்ப  புதிய ஹீரோ இவரா ?

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் படம் கிடப்பில் போடப்பட்டது.

ஒரு கட்டத்தில் படம் கைவிடப்பட்டதாகவே நினைத்த நிலையில் திடீரென்று ‘பத்து தல’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இயக்குனர் நர்தனுக்கு பதில் காந்தி கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்பு இல்லாத மற்ற காட்சிகளை படக்குழுவினர் தென் தமிழகத்தில் படமாக்கி முடித்துள்ளனர். சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ ஷூட் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இதுவரை சிம்பு ஷுட்டிங்கில் கலந்துகொள்ளவில்லை. தன் தந்தையின் சிகிச்சைக்காக இப்போது லண்டனில் இருக்கிறார். இந்நிலையில் திடீரென சர்ப்ரைஸாக ‘பத்து தல’ திரைப்படம் டிசம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களை அடுத்து சிம்பு நடிப்பில் ஒப்பந்தம் ஆன திரைப்படம் கொரோனா குமார். இந்த படத்தை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தை இயக்கிய கோகுல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது படத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் வேறு ஏதாவது ஒரு ஹீரோவை வைத்து படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

No posts to display