வெறும் வங்கி கொள்ளை மட்டுமல்லாது ‘ஏகே 61’ படத்தில் மற்றுமொரு டுவிஸ்ட் !! வெளியான மாஸ் அப்டேட் !!

0
வெறும் வங்கி கொள்ளை மட்டுமல்லாது ‘ஏகே 61’  படத்தில் மற்றுமொரு டுவிஸ்ட்  !! வெளியான மாஸ் அப்டேட் !!

‘ஏகே 61’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக எச் வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார்.

எச். வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

கடந்த மாதங்களாக ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது என்பதும், சென்னை அண்ணா சாலை போன்று அமைக்கப்பட்ட செட்டில் சுமார் முக்கால்வாசி, படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெற இருப்பதாகவும் அதன் பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதாகவும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட கதை என்றும் இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபலமான வங்கி ஒன்றில் நடந்த கொள்ளையை மையப்படுத்தி தான் இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இப் படத்தில் பாடல்களே இல்லை என்றும் இரண்டு தீப் பாடல்கள் மட்டும் அவ்வப்போது வந்து போகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்திவருகிறது.

No posts to display