சும்மா ஹாலிவுட் ஹீரோ கெட்டப்பில் அஜித்.! இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் இதோ .!

0
சும்மா ஹாலிவுட் ஹீரோ கெட்டப்பில் அஜித்.! இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புதிய  புகைப்படம் இதோ .!

ஆரம்ப காலத்தில் ஒரு பைக் மெக்கானிக்கராக இருந்து அதன் பின்னர் தன்னை ஒரு நடிகராக அறிமுகப்படுத்தி அதனைத் தொடர்ந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவரே நடிகர் அஜித். தமிழ் சினிமாவில் ‘அமராவதி’ என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது ‘ஆசை’ என்ற திரைப்படம் தான்.

நடிப்பையும் மிஞ்சி இவரது அழகுக்கு மயங்காத பெண் ரசிகர்களே இல்லை என்று தான் கூற முடியும். அமராவதியில் ஆரம்பித்து வலிமை வரைக்கும் பல படங்களில் நடித்துள்ள இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கின்றார்.

இவர் நடித்த பல படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழையும் பரப்பி இருக்கின்றன.

எனினும் தற்போது அஜித் வினோத் இயக்கத்திலேயே தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பிற்கு இடைவேளை விட இப்போது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.

இதுவரை வெளிநாட்டில் அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் வெளியாக தற்போது அவரது குடும்பத்தின் புகைப்படங்கள் வெளியாகிறது.மேலும் அஜித் தனது மகனின் கையை பிடித்துக்கொண்டு நடக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

அப்போது அஜித்துடன் சிலர் புகைப்படங்களை எடுத்தனர். இதில் அஜித் ஹாலிவுட் நடிகர் Hugh Jackman போல் இருப்பதாக இரண்டையும் ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். ஒரு இந்த பபுகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

No posts to display