இந்தியாவை காப்பாத்துற மாறி ஒரு கதை அஜித் சாரை வைத்து பண்ணனும்…!!! அஜித் ஹரி கூட்டணி அப்போ உறுதியா..?

0
இந்தியாவை  காப்பாத்துற மாறி ஒரு கதை அஜித்  சாரை வைத்து பண்ணனும்…!!! அஜித்  ஹரி கூட்டணி அப்போ உறுதியா..?

‘ஏகே 61’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டிருக்கும் படத்திற்காக இயக்குனர் எச் வினோத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார். தயாரிப்பாளர்களின் திட்டப்படி படத்தின் படப்பிடிப்பு சீரான வேகத்தில் நடந்து வருகிறது, மேலும் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்த ‘ஏகே 61’ திரைப்படம் நிஜ வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டது என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. ‘ஏகே 61’ அல்லது ‘அஜித் 61’ ஒரு திருட்டு த்ரில்லர் என்றும், படம் வங்கிக் கொள்ளையைப் பற்றியது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் எச்.வினோத் சில நிஜ சம்பவங்களில் இருந்து குறிப்புகளை எடுத்துள்ளதாக தெரிகிறது.

அஜித் நடிப்பில் தற்போது வினோத் இயக்கத்தில் அவரது 61வது திரைப்படம் தீவிரமாக தயாராகி வருகிறது. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரீமேக் திரைப்படம். வலிமை திரைப்படம் அஜித் கூறிய ஒரு வரி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஆனால், தற்போது படமாக்கப்பட்டு வரும் அஜித்தின் 61வது திரைப்படம் முழுக்க முழுக்க வினோத்தின் கைவண்ணத்தில் உருவானதாம். எந்தவித சமரசமும் இல்லாமல் முழுக்க முழுக்க இயக்குனர் வினோத்தின் படமாக உருவாகிறதாம். இதனை கேட்ட ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ஏற்கனவே வலிமை திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை ஆதலால் இந்த திரைப்படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் ரசிகர்களை. தற்போது அந்த நம்பிக்கையை, எதிர்பார்ப்பாக மாற்றும் வண்ணம் பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதே படத்தில் அஜீத் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது நமக்கு தெரியும். தற்போது வெளியான தகவலின்படி இந்த திரைப்படத்தில் பாடல்களே கிடையாதாம். அந்த அளவுக்கு கதை விருவிருவென இருக்குமாம். தற்போது வரை இரண்டு தரமான தீம் பாடலை இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்து முடித்து விட்டாராம்.

இதனைக்கேட்ட ரசிகர்களுக்கு முதன்முறையாக அஜித்தின் படத்திற்கு பாடல்கள் இல்லாமல் வெளியாகிறது. அதுவும் முழுக்க முழுக்க இயக்குனர் வினோத்தின் விறுவிறுப்பான திரைக்கதையின் உருவாகிறது என்ற எதிர்பார்ப்பே தற்போது அதிகமாகி உள்ளது. திரைப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறம் இருக்க பக்கா கமர்சியல் இயக்குனர் ஹரி அவர்களுடன் விஜய் கூட்டணி எப்போது நடக்கும் என்று விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கமர்சியல் படங்களை விரும்பும் ரசிகர்களும் பெரிதாக எதிர்பார்த்து வந்தனர். தற்பொழுது அதற்கு பதில் கிடைத்துள்ளது சமீபத்தில் பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அஜித்தை வைத்து படம்
இயக்கினால் இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயத்தை வைத்து #ராபின்_ஹூட் கேரக்டர் போன்று பக்கா ஆக்ஷன் படமா தருவேன்

No posts to display