இயக்குனர் சிவா செய்த வேலையால் அந்த பட வாய்ப்பு மிஸ்.! கடும் வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ்.!

0
இயக்குனர் சிவா செய்த வேலையால் அந்த பட வாய்ப்பு மிஸ்.! கடும் வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ்.!

மணிரத்னம் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.

படத்தி டீசர் கூட நேற்று வெளியிடபட்டது. டீசர் மிகவும் அருமையாக இருந்த காரணத்தால் படத்தின் மீது பெரிய எதிர்பார்புகள் உள்ளது.இந்த படத்தில் நடிக்க முதலில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். ஆனால், கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் அவர்களால் நடிக்க முடியாமல் போக பிறகு வேறு நடிகர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து விட்டது.

அந்த வகையில், குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த த்ரிஷாவுக்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்தது வேறொரு நடிகை தானாம். அவர் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் கீர்த்தி சுரேஷ் தான்.

ஆனால், கீர்த்தி சுரேஷ் அப்போது அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து வந்ததால், இந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டாராம். பிறகு, படத்தின் கதையை த்ரிஷாவிடம் கூற உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் நேற்று வெளியான டீசரை பார்த்த கீர்த்தி சுரேஷ் நம்மளே இதில் நடித்திருக்கலாம் என்ற எண்ணம் கண்டிப்பாக வந்திருக்கும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

No posts to display