துளியளவும் கண்டுகொள்ளாத விஜய்… கை கொடுத்த அஜித் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல மாஸ் நடிகர் !!

0
துளியளவும் கண்டுகொள்ளாத விஜய்… கை கொடுத்த அஜித் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல மாஸ் நடிகர் !!

நடிகர் அஜித் தற்சமயம் வெளிநாட்டு சுற்றுலா பயணத்திலுள்ளார். இந்தியா திரும்பியதும் வினோத் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு, அடுத்ததாக விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கவுள்ளார்.

பொதுவாக அஜித் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் திரைப்படம் சார்ந்த சங்கங்களுக்கோ இல்லை பணியாளர்களுக்கோ ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் உடனே குரல் கொடுக்கக் கூடியவர். பண உதவியும் செய்யக் கூடியவர்.

அப்படி திரை மறைவில் அவர் செய்த சில செயல்களை பகிர்திருக்கிறார் நடிகர் மீசை ராஜேந்திரன். பல திரைப்படங்களில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ல ராஜேந்திரன், அஜித்துடன் நடந்த சம்பவம் ன்றை பகிர்ந்துள்ளார்.

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ஃபெஃப்சி சங்கத்திற்கும் பிரச்சன எழுந்தது. அதில் தொழிலாளர்களுக்கு ஆதரவா குரல் குடுத்தார் அஜித். அதனால் அவருக்கு படங்கள் கொடுக்கக் கூடாது என்று கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது என இயக்குநர் விக்ரமன் ஒரு முறை கூறியிருந்தார்.

தன்னுடைய பட நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாதவர், ஒரு முறை நடன இயக்குநர்கள் சங்கம் நடத்திய விழாவில், அவர்கள் மேல் வைத்திருந்த மரியாதைக்காக கலந்து கொண்டார். தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடக மாநிலத்திற்கு மின்சாரம் தரக் கூடாது என்று விஜயகாந்த தலைமையிலான நடிகர் சங்கம் நெய்வேலியில் போராட்டம் செய்தபோது, முன்னணு நடிகர்கள் சிலர் கலந்து கொள்ளாமல் தவிர்த்தபோது கூட அஜித் அதில் கலந்து கொண்டார். அந்தப் போராட்டத்திற்கு அஜித் நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததாக விஜயகாந்த் அவர்களும் ஒரு முறை கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முக அடையாளம் தெரியும் ஆனால் பெயர் முதலிய பிற விவரங்கள் தெரியாத அளவிற்கு மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளும் பல நடிகர்கள் உள்ளனர். அவர்களில் மீசை ராஜேந்திரனும் ஒருவர். அட்டகாசம் திரைப்படத்தில் அஜித்துடன் இவர் நடித்திருந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சி பிரபலமானது. இவர் சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் அஜித் செய்த பண உதவிகளை பற்றி குறிப்பிட்டிருந்தார். “என்னை அறிந்தால்” ஷூட்டிங் நடந்து சமயம், வேறு ஒரு ஷூட்டிங்கிற்காக அதே ஸ்பாட்டில் இருந்திருக்கிறார் மீசை ராஜேந்திரன்.

அப்போது, அஜித்திடம் பேசலாமா, பேசினால் திரும்ப பேசுவாரா என்ற குழப்பத்துடன் சரி பேசித்தான் பார்ப்போமே என்று அவரிடம் சென்று என்னை தெரிகிறதா சார் என்று கேட்டாராம். அதற்கு,”என்ன சார் அட்டகாசம் படத்துல நடிச்சிருக்கோம், எப்படி உங்கள மறப்பேன்” என்று அஜித் கூறினாராம். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காட்சியில் நடித்ததை ஞாபகம் வைத்து பேசுகிறாரே என்று மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்தாராம் ராஜேந்திரன். அப்போது, விஜயகாந்த் அவர்களின் உடல் நலம் குறித்து தன்னிடம் விசாரித்ததாகவும், நான் சாப்பிடப் போகிறேன், நீங்களும் சாப்பிட வருகிறீர்களா என்று தனக்கு மரியாதை கொடுத்ததாகவும் மீசை ராஜேந்திரன் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

No posts to display