சென்னையில் பிரபலமான இடத்தில் நடக்கும் “அஜித் 61” ஷூட்டிங்… இயக்குனரோடு வெளியான புகைப்படம் இதோ !!

0
சென்னையில் பிரபலமான இடத்தில் நடக்கும் “அஜித் 61” ஷூட்டிங்… இயக்குனரோடு வெளியான புகைப்படம் இதோ !!

தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். ஹச் வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்த அஜித். AK 61 படத்தில் நடித்து வருகிறார். ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 13ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படுவதாக கூறுகின்றனர். அஜித்தும் ஸ்ரீதேவி மீது அதிக மரியாதை கொண்டுள்ளதனால் இந்த தேதியில் தனது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட ஒப்புக்கொண்டார்.

மேலும் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் சம்பளம் வாங்காமல் கூட நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லு க் வெளியிட போகும் தேதி வெளியாகிய நிலையில் அஜித் ரசிகர்கள் ஆகஸ்ட் 13ஆம் தேதி வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளில் இருக்கின்றார். மேலும் அங்கு பைக் ரைடிங் செல்லும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த மாத இறுதியில் இந்தியா திரும்பி ஏகே 61 ஸ்டூட்டிங்கில் கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது சென்னையில் அஜித் இல்லாத காட்சிகளை இயக்குனர் வினோத் படமாக்கி வருகிறார். இந்த காட்சிகளில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோரோடு ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

No posts to display