அர்ஜுனின் இந்த படத்தின் உல்டாவா விஜய் நடிக்கும் வாரிசு படம் வைரலாகும் தகவல் இதோ !

0
அர்ஜுனின் இந்த படத்தின் உல்டாவா விஜய் நடிக்கும் வாரிசு படம் வைரலாகும் தகவல் இதோ !

ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வரிசு’ அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் வெளியிடப்பட்டன, மேலும் மூன்று வெவ்வேறு போஸ்டர்கள் படத்திற்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜய் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது, அதே சமயம் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் பல பிரபல நட்சத்திரங்களுடன் முன்னணி பெண்ணாக நடிக்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜ் தயாரிப்பில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் படம் வாரிசு. இந்த படத்தில் நடிகை ரஷ்மிக்கா மந்தன்னா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார்,யோகி பாபு. நடிகைகள் குஷ்பு, சங்கீதா கிரிஷ் மேலும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த முக்கிய நடிகர்கள் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படம் செண்டிமெண்ட் கலந்த குடும்ப படம் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் சுந்தர் சி. இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் சுமார் 18 வருடங்களுக்கு முன்பு வந்த படம் கிரி, இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது, இரண்டு கிராமத்தை சேர்ந்த விணுசக்கரவர்த்தி மற்றும் பெப்சி விஜயன் இருவருக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையில் பெப்சி விஜயனின் ஒரு மகன் இறந்து விடுகிறான், இதனால் வினு சக்கரவர்த்தியின் வாரிசுகளை அழிப்பேன் என சபதம் எடுக்கிறார் பெப்சி விஜயன், இதனை தொடர்ந்து தனது வாரிசான மகன் பிரகாஷ்ராஜை தலைமறைவாக வளர்க்கிறார் வினு சக்கரவர்த்தி.

ஒரு கட்டத்தில் வினு சக்கரவர்த்தி மகன் தான் பிரகாஷ்ராஜ் என்பதை கண்டறிந்த பின்பு பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுகிறார். அதன் பின்பு பிரகாஷ் ராஜ் – தேவயானி மகனான சிறுவன் கிரி, அதாவது விணுசக்கரவர்தியின் வாரிசான அந்த சிறுவனை கொலை செய்ய துடிக்கிறான் வில்லன், அந்த வில்லனிடம் இருந்து விணுசக்கரவர்த்தி வாரிசை நடிகர் அர்ஜுன் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் சுந்தர் .சி இயக்கத்தில் வெளியான கிரி படத்தின் கதை.

இந்நிலையில் தற்பொழுது விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் கதை என்ன என்பது குறித்து பரபரப்பான தகவல் ஓன்று வெளியாகியுள்ளது. அதில் வாரிசு திரைப்படம் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கிரி பட கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ள நிலையில், பிரபல தொழில் அதிபருக்கும் வில்லனுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த தொழிலதிபர் எதிரிகளால் கொலை செய்யப்படுகிறார்.

ஆனால் அந்த தொழிலதிபருக்கு கிரி படத்தில் விணுசக்கரவர்திக்கு எப்படி ரகசியமாக பிரகாஷ்ராஜ் என்கிற மகன் ரகசியமான வாரிசாக இருந்தார், அதே போன்று இவருக்கும் ரகசிய வாரிசு இருக்கிறது. தொழில் அதிபர் கொலை செய்வதற்கு முன்பே ஒரு சில காரணங்களால் அவரின் வாரிசு யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு குடும்பத்தில் வளர்க்கப்பட்டு வருகிறார். இந்த தகவல் படத்தின் வில்லனுக்கு தெரிய வந்துள்ளதை தொடர்ந்து.

தொழிலதிபரின் வாரிசை அழிக்க தேடுதல் வேட்டையில் இறங்குகிறான் அந்த படத்தின் வில்லன். இதில் அந்த வாரிசை கண்டுபிடித்து என்ன செய்கிறான் வில்லன் என்பது தான் படத்தின் கதை என விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் கதை என பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், 18 வருடத்துக்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கிரி படத்தின் கதையை காப்பியடித்து படம் எடுக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது

நடிகர் தளபதி விஜய் தெலுங்கில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ‘வரிசு’ என்ற பெயரில் ‘தளபதி 66’ படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

No posts to display