சூர்யா இந்தியனே இல்லை, கடுமையாக தாக்கி பேசும் பிக்பாஸ் நடிகை !!

0
சூர்யா இந்தியனே இல்லை, கடுமையாக தாக்கி பேசும்  பிக்பாஸ் நடிகை !!

மாதவன் நடிப்பில் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான படம் ராக்கெட்ரி. அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் மாதவன் உடல் எடையை குறைத்தும் ஏற்றியும் பல உழைப்பை போட்டு இயக்கி வெளியிட்டுள்ளார்.

படம் மக்கள் மத்தியில் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தில் நடிகர் ஷாருக்கான், நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சூர்யா நடித்தது பற்றிய பிக்பாஸ் நடிகையும் பாஜக கட்சியின் உறுப்பினருமான காயத்ரி ரகுராம் ஒரு பதிவினை போட்டுள்ளார். மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய்ஹிந்த் என்று கூறுகிறார்கள்.

ஆனால் சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியன் இல்லையா? இந்தியா வாழ்க என்று சொல்வதில் பெருமையாக இல்லையா? என்ற கருத்தினை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி சூர்யாவை வம்புக்கு இழுத்துள்ளார். இதற்கு சூர்யா ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

No posts to display