அஜித் எனக்கு கூட பிறக்காத அண்ணன் மாதிரி !! மனம் திறக்கும் காமெடி நடிகை பிரியங்கா நீங்களே பாருங்க

0
அஜித் எனக்கு கூட பிறக்காத அண்ணன் மாதிரி !! மனம் திறக்கும் காமெடி நடிகை பிரியங்கா நீங்களே பாருங்க

‘ஏகே 61’ படத்தின் மூன்றாவது ஷெட்யூல் இம்மாதம் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில், லண்டனில் விடுமுறை முடிந்து அஜித் விரைவில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஏகே 61’ படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
‘ஏகே 61’ படத்திற்குப் பிறகு, அஜித் தனது அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

“எங்க குடும்பத்தில் ஒருத்தராகத்தான் அவரைப் பார்த்துட்டு இருக்கோம்… இப்பவும் அம்மாகிட்ட அஜித் சார் பற்றிக் கேட்டா ’பெரிய பையன்’ன்னுதான் சொல்லுவாங்க!” – பிரியங்கா”கிட்டத்தட்ட எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கேன் என்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு!” எனப் புன்னகைக்கிறார் பிரியங்கா.

சினிமாவில் காமெடி நடிகராக நமக்குப் பழக்கப்பட்டவராக இருந்தாலும் சின்னத்திரையைப் பொறுத்தவரை வில்லி பிரியங்கா என்றால்தான் சட்டென இவர் முகம் நினைவிற்கு வரும். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘கன்னத்தில் முத்தமிட்டாள்’ தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஓர் அழகிய மாலை நேரத்தில் அவருடைய இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.”என் அக்கா கணவர் மூலமா எதார்த்தமா ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைச்சது. அதுல ஸ்டில் சாரதி சாரை நேர்காணல் பண்ணினேன். அப்படித்தான் மீடியா எனக்கு அறிமுகமாச்சு. ஆங்கரிங்கைப் பார்த்துட்டு ‘காதல் தேசம்’ படத்துக்குக் கூப்பிட்டாங்க. அதுதான் என் முதல் படம். அந்தப் படம் எடுக்கும்போது முதல் ஷாட்டே ரொம்ப நேரம் எடுத்துச்சு. கறுப்பு மேக்கப் போட்டு கறுப்பா இருந்தேன். அந்தப் படத்தையே ரெண்டு, மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் பார்த்தேன்” என்றவரிடம் ரீ-என்ட்ரி குறித்துக் கேட்டோம்.

”கோவிட் லாக்டௌன் காரணமா எல்லாமே முடங்கியிருந்துச்சு. இப்பதான் சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருக்கு. என்னதான் சினிமாவில் காமெடியா நடிச்சாலும் சின்னத்திரையில் நான் வில்லி தெரியுமா!” எனப் புருவம் உயர்த்துகிறார்.

“பொதுவா சீரியலில் வில்லியா நடிக்கிறவங்களை நேரில் பார்க்கும்போது ஆடியன்ஸ் திட்டுவாங்கன்னுதான கேள்விப்பட்டிருக்கீங்க. ஆனா, என்னை யாரும் திட்ட மாட்டாங்க. அவங்களுக்குப் பிடிச்ச காமெடியைச் சொல்லிப் பாராட்டுவாங்க.வடிவேலு சார் யாருன்னு தெரியாத வயசிலேயே அவருடன் நடிச்சிட்டேன். விபத்தா அமைஞ்சதுதான் அந்த வாய்ப்புகள் எல்லாமே! அவரும் கிட்டத்தட்ட பத்து வருஷமா பெருசா நடிக்கலைன்னு கேள்விப்பட்டேன். நான் கல்யாணத்துக்குப் பிறகு மீடியாவிலிருந்து விலகி இருந்ததால சினிமா எதுவும் தெரியாது. இப்பதான் அவர் இத்தனை வருஷம் நடிக்காம மறுபடி நடிக்க வந்திருக்கார்னு தெரிஞ்சுகிட்டேன். வெளியில் பார்க்கிறவங்க எல்லாரும் எப்ப நடிப்பீங்கன்னு கேட்பாங்க. இதைச் சொல்லலாமா, கூடாதான்னுகூட எனக்குத் தெரியல. என் பர்சனல் வாழ்க்கை விவாகரத்தை நோக்கிப் போயிட்டிருக்கு” என்றவர், சில நொடி மெளனத்திற்குப் பின் தொடர்ந்தார்.

”அஜித் சாருடன் ‘வில்லன்’ படத்தில் நடிச்சது நல்ல அனுபவமா இருந்துச்சு. அஜித் சாரை ரொம்பப் பிடிக்கும். அவரைப் பார்க்கும்போதும் சரி, அவருடன் படங்களில் நடிக்கும்போதும் சரி, ஒரு அண்ணன் உணர்வு இருந்துட்டே இருக்கும். எங்க குடும்பத்தில் ஒருத்தராகத்தான் அவரைப் பார்த்துட்டு இருக்கோம்… இப்பவும் அம்மாகிட்ட அஜித் சார் பற்றிக் கேட்டா ’பெரிய பையன்’ன்னுதான் சொல்லுவாங்க” என்றவர், பர்சனல் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

அம்மாவுக்கு கேன்சர் வந்துடுச்சு. 10, 15 நாளில் ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க. அதைக் கேட்டதிலிருந்து நான் தூங்கவே இல்லைன்னு அம்மா சொன்னாங்க. எனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை. எல்லாமே மறந்துடுச்சு. உன்னைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு அம்மா அழுதிருக்காங்க. அதுக்கும் நான் ரியாக்ட் பண்ணாமலே இருந்திருக்கேன். தூக்க மாத்திரை கொடுத்துத் தூங்க வச்சு ட்ரீட்மென்ட் பண்ணினதுக்குப் பிறகுதான் சரியாகியிருக்கேன். இப்பகூட அந்த மருத்துவமனைச் சூழலை நினைச்சா மனசு பாரமாகிடும். இப்ப அம்மா குணமாகிட்டாங்க. நல்லா இருக்காங்க!” எனப் புன்னகைக்கிறார்.

நடிகர் அஜித் தற்போது ஐரோப்பாவில் உள்ள தனது நண்பர்களுடன் விடுமுறையில் இருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, நடிகர் லண்டன் முழுவதும் பைக் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. எச்.வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட அஜித், ஐரோப்பா முழுவதும் சாலைப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

No posts to display