சமந்தா பாணியில் கவர்ச்சி ததும்ப ஐட்டம் டான்ஸ் ஆடிய அஞ்சலி… வைரலாகும் கிளாமர்

0
சமந்தா பாணியில் கவர்ச்சி ததும்ப ஐட்டம் டான்ஸ் ஆடிய அஞ்சலி… வைரலாகும் கிளாமர்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் உடல் எடையை குறைத்து மெலிதாக மாறிய நடிகை அஞ்சலி ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். இவர் நிதின் படத்தில் ஐட்டம் பாடலில் நடித்து வருகிறார்.

‘மச்சர்லா நியோஜகவர்கம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கிருத்தி ஷெட்டி மற்றும் கேத்தரின் தெரசா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்போது, ​​அஞ்சலி படத்திற்கு மேலும் கவர்ச்சியை சேர்த்துள்ளார். படத்தில் ஐட்டம் கேர்ளாக நடித்துள்ளார். இந்த சிறப்பு பாடலுக்கான அவரது நடிப்பை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

சமீப காலமாக தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பல நடிகைகள் தெலுங்கு படங்களில் கவர்ச்சி நடனம் ஆடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சமீபத்தில் கூட நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தார் “ஓ சொல்றியா மாமா” பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சமந்தாவின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்று விட்டது.

சமந்தாவை தொடர்ந்து “ஆச்சார்யா” படத்தில் ரெஜினா ஒரு குத்து பாடலுக்கு நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து கவர்ச்சியான பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருபர். இந்த பாடலும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இவர்களை தொடர்ந்து தற்போது அஞ்சலியும் கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அதன்படி, தற்போது நடிகர் நிதின் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான “மார்சேலா நீயோஜகவர்கம்” என்ற படத்தில் ஒரு குத்து பாடலுக்கு அஞ்சலி நடனமாடியுள்ளார்.

ஆரம்ப காலகட்டத்தில், இருந்து தனக்கு ஏற்ற குடும்ப கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்த அஞ்சலி தற்போது கவர்ச்சியான குத்துப்பாடலில் நடனமாடியுள்ளதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கிறார்கள்.

மேலும் அஞ்சலி தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ராம்சரணின் 15-வது படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும், இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display