தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் எடுத்த முடிவால் கடும் அப்செட்டில் அனிருத் !!

0
73
thalapathy 67

விக்ரம் என்ற அதிரடி ஆக்சன் படத்தை மக்களுக்கு கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறிவிட்டார். இந்த விக்ரம் படம் அவரே என்னை எங்கேயோ கொண்டு சென்று விட்டது என்றே கூறலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக எந்த நடிகரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அந்த வகையில், கடந்த சில மாதங்களாகவே விஜய்யின் 67- வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. இதனையடுத்து, மீண்டும் விஜய் லோகேஷ் கனகராஜ் இணையம் இந்த படத்திற்கு எந்த இசையமைப்பாளர் இசையமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் கேள்வியாக இருந்தது.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பின்னணி இசையில் பூந்து விளையாடும் சாம் சி எஸ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது ஆனால் இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், தளபதி 67- படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர்,விக்ரம் போன்ற படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார்.

அந்த படங்களின் இசையை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம் . இதனையடுத்து தனக்கு சரியானவர் அனிருத் என்பதால் லோகேஷ் மீண்டும் அவரே தேர்வு செய்துவிட்டாராம். ஆனால், இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.

ஏனென்றால், தொடர்ந்து மாஸ்டர் ம் பீஸ்ட் ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார். இதனால் வேறு இசையமைப்பாளர் இசையில் விஜய்யை பார்க்க ஆவலுடன் காத்திருந்த தளபதி ரசிகர்களுக்கு இந்த தகவல் சோகத்தை கொடுத்துள்ளது என்கிறது சினிமா வட்டாரம்.