விக்ரம் படத்தை போலவே மீண்டும் சம்பளம் வாங்காமல் நடித்த சூர்யா.! எந்த படத்தில் தெரியுமா.?

0
74

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில் சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

suriya
படத்தில் சில நிமிட காட்சி என்றாலும், அவர் வரும் காட்சியை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் மிரட்டு போயினர்., ஏனென்றால் அப்படி ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.விக்ரம் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், சூர்யா இந்த படத்தில் நடித்ததற்காக சம்பளம் கூட வாங்கவில்லை என்ற செய்தி அனைவர்க்கும் தெரியும்.

suriya

இந்த படத்தை போல, மற்றறொரு படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம். ஆம், நடிகர் மாதவன் இயக்கி அவரே நடித்துள்ள படம் “ராக்கெட்ரி: நம்பி தி எஃபெக்ட்” இந்த படம் வரும் ஜூலை 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

suriya

இந்த படத்தின் சிறப்புத் தோற்றத்தில் தமிழில் சூர்யாவும் , இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஷாருக்கானும் நடித்துள்ளனர். இதனையடுத்து, இப்படத்தில் நடிக்க நடிகர் சூர்யா 1 ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்று நடிகர் மாதவனே தெரிவித்துள்ளார்.

suriya

முதலில் விக்ரம் இப்போது, ராக்கெட்ரி என சம்பளம் வாங்கலாம் சூர்யா நடித்துள்ளது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் மார்க்கெட் இல்லாத நடிகர்கள் கூட கெஸ்ட் ரோலில் நடிக்காமல் சம்பளம் வாங்காமல் நடிக்க மாட்டார்கள் ஆனால் சூர்யா நீங்கள் சிறந்த மனிதர் என பாராட்டி வருகிறார்கள்.