தளபதி விஜய் பிறந்தநாளுக்கு வாரிசு படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகை!

தளபதி விஜய் இன்று தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், ‘சகோதரர் விஜய் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் அதிக அதிஷ்டத்துடன், உற்சாகம் மகிழ்ச்சி வெற்றி மற்றும் கடவுளின் ஆசிர்வாதத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என்றும் மேலும் இந்த பிறந்த நாள் உங்களுக்கு மிகச் சிறந்த நாளாக இருக்க வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஜய் மற்றும் குஷ்பூ ஆகிய இருவரும் ‘மின்சார கண்ணா’, ‘வில்லு’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.