ரஜினிகாந்த்தை தொடர்ந்து விஜயகாந்த் விரைவில் குணமடைய கமல்ஹாசன் வாழ்த்து

0
30
kamal vijayakanth

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்துவதாக நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதால், உடல்நிலை மோசமானதாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவரின் வலது கால்களில் உள்ள மூன்று விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது என செய்து வெளியானது. இதுதொடர்பாக தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி, விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், நேற்று விரல் அகற்றப்பட்டது எனவும், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.