தளபதி விஜய் பிறந்தநாளில் உலகளவில் டிரெண்ட் ஆகும் #என்றும்_தலஅஜித்

0
97
ak vijay

தமிழ்சினிமாவில் சாதாரண ஒரு நடிகனா வந்து இன்று தனக்கென ஒரு தனி அடையாளத்தையே கொண்டுள்ளவர் தளபதி விஜய். இவரின் கண் அசைவிற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்ய இவரின் உயிருக்கு உயிரான ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். இந்த பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விஜயின் பிறந்தநாள் இன்று.

விஜயின் பிறந்தநாள் வந்ததும் தான் வந்தது, அவரது ரசிகர்கள் ஒரு வாரமாக அவரது பிறந்தநாளை கொண்டாட துவங்கிவிட்டனர். தற்போது நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் குறித்த அப்டேட் கேட்டு தயாரிப்பாளரை டார்ச்சர் செய்ததில் துவங்கி இன்று வரை தினமும் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றனர். நேற்று வேறு வாரிசு திரைப்படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக், இரண்டவது லுக் வெளியாக உள்ள நிலையில்

இந்நிலையில் விஜயின் பிறந்தநாளான இன்றும் அவருக்கு வாழ்த்து சொல்லும் #happybirthdayTHALAPATHY என்ற ஹேஷ் டேக் தான் டிரெண்டிங்கில் இருந்தது. ஆனால் எங்கிருந்து வந்தார்கள் என தெரியவில்லை திடீரென இந்த அஜித் ரசிகர்கள் #என்றும்_தலஅஜித் என்ற ஹேஷ் டேக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்ய துவங்கிவிட்டனர். தற்போது இந்த ஹேஷ்டேக் உலகளவில் உள்ள டிரெண்டிங் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

ak vijay

தற்போது #என்றும்_தலஅஜித் என்ற ஹேஷ் டேக் தேசிய அளவில் முதலிடத்திலும், #happybirthdayTHALAPATHY என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் இரண்டாவது இடத்திலும் டிரெண்டாகி வருகிறது.

இதனால் தற்போது டுவிட்டரில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் கடுமையாக போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் ஒரு நெகட்டிவ் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர் அதற்கு அஜித் ரசிகர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு இருந்தது.

ஆனால் இந்த #என்றும்_தலஅஜித் என்ற ஹேஷ் பாசிடிவ் ஹேஷ் டேக் என்பதால் அதை டிரெண்டிங்கிலேயே வைத்திருப்பதில் அஜித் ரசிகர்கள் தீவிரமாக உள்ளனர்.