தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படம் செகண்ட் லுக் குறித்த மாஸ் அப்டேட் இதோ !!

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21 படத்தின் டைட்டில் மற்றும் ஃப்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் நேற்று மாலை ‘வாரிசு’ என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படம் ஒரு குடும்ப செண்ட்டிமெண்ட் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருவதாக கூறபடுகிறது.

இந்நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வாரிசு’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.