பீஸ்ட் படத்தின் ‘Original Backgroung Score’ வீடியோ இதோ !!

0
14

விஜய் கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘பீஸ்ட் ‘ என்ற அதிரடி படத்தை வெளியிட்டனர் . இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது. அந்த வகையில் இந்தப் படம் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்தது என்பதும் தயாரிப்பாளருக்கு இந்த படத்தால் லாபம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னரே அரபிக்குத்து பாடல் உலகளவில் வைரலாகியது . இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் இப்பாடலை நம்ம சிவகார்த்திகேயன் தான் எழுதியுள்ளார்.

சிறியவர்கள் , பெரியவர்கள் என பட்டித்தோட்டி எல்லாம் மாசான ஹிட் பாடலாக உள்ளது . நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் அரபிக் குத்து ஸ்டெப் போட்டனர் .யூடியூப், பேஸ் புக் என பல மில்லியன் வியூவர்ஸுக்கு மேல் இப்பாடலை பார்த்துள்ளனர் .இப் பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியுள்ளனர்.

அரபிக்குத்து பாடலை சாங் வடிவில் வெளியிடப்போவதாக கடந்த 9-ஆம் திகதி உத்தியோக நியூஸ் வெளியாகவுள்ளது.

அந்தவகையில் அரபிக் கூத்து பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து முன்னணி இடம் பிடித்துள்ளது. இப்பாடல் இந்திய அளவில் ட்ரெண்டிங் பாடல் வரிசையில் 4ஆம் இடத்திலும்,தமிழ் பாடல் வரிசையில் முதலிடத்திலும் உள்ளது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக் தற்போது வெளியாகியுள்ளது. யூடியூபில் வெளியாகி உள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

‘தளபதி 66’ படத்தில் இரண்டு வித்தியாசமான தோற்றங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.