இணையத்தில் படு வைரலாகும் நமீதா வீட்ல விசேஷம் புகைப்படங்கள்!

0
76

நடிகை நமீதா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சரத்குமார், சத்யராஜ் என பலருடன் நடித்துள்ளார். சினிமா மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருப்பவர் நமீதா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நமீதா, அந்த ஆண்டே தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் நமீதா.

இந்நிலையில் நடிகை நமீதாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றது. இதில் சிவப்பு பார்டர் கொண்ட நீல நிற பட்டுபுடவை கை நிறைய வளையல்கள் என கலக்கலாக இருந்தார்.

மேலும் தனது கையில் அம்மாவுடன் கிருஷ்ணர் இருக்கும் மெஹந்தியையும் போட்டிருந்தார். நமீதாவின் மெஹந்தி மற்றும் வளைகாப்பு போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களை பாத்த நெட்டிசன்கள் நமீதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.