இதற்கு மேல் விஜய் கூட படம் பண்ண முடியாது.! வருத்தத்துடன் பேசிய சுந்தர் சி.!

0
20

தமிழ் சினிமாவில் ரஜினி,கமல் , அஜித், பிரசாந்த் என முன்னணி நடிகர்களை வைத்து முந்திய காலகட்டத்தில் படங்களை இயக்கியவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் வெளியான வின்னர், உன்னை தேடி, அன்பே சிவம், அருணாச்சலம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இப்படி டாப் நடிகர்களை வைத்து படம் இயக்கிய சுந்தர் சி தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை. இவர்கள் இருவரும் இணைந்து எப்போது படம் பண்ண போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே இருக்கிறது.

இதனையடுத்து, சமீபத்தில் ஒரு நேர்காணலில் லைஃப் ல ஒரே ஃபீலிங் விஜய் சார் கூட படம் பண்ணாதது தான் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய சுந்தர் சி ” என்னுடைய வாழ்க்கையில் ஒரு கவலை விஜய் சார் கூட படம் பண்ணாதது தான். இனிமேல் படம் பண்ணவும் முடியாது . ஆனால் எனக்கு ஆசை உள்ளது. நான் ரஜினிசார் கூட படம் பண்ணிட்டேன், கமல் சார் கூட படம் பண்ணிட்டேன், மிஸ்டர் அஜித் கூட பண்ணிட்டேன். அதுனால விஜய் சார் கூட படம் பண்ணாதது கொஞ்சம் கவலையா இருக்கு ” என தெரிவித்துள்ளார்.

அவர் பேசிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சுந்தர் சிக்கு கருணை காட்டுவாரா விஜய் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். சுந்தர் சி தற்போது “காபி வித் காதல்” என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.