அஜித் போடும் புதிய கணக்கு !! அதிரும் திரையுலகம்

0
76
Ajith 61

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஏகே 61′ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியார் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் கிடைத்த ஓய்வு நேரத்தில் தற்போது இங்கிலாந்து நாட்டில் அஜித் பைக் பயணம் சென்றுள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி தற்போது அவர் பெல்ஜியம் உள்பட ஒரு சில ஐரோப்பிய நாடுகளிலும் பைக் பயணம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஏகே 61′ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த கட்டமாக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மீண்டும் வெளிநாடுகளில் பைக் சுற்றுப்பயணம் செய்ய அஜித் திட்டமிட்டிருப்பதாகவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்வதே அவரது இலக்கு என்றும் கூறப்படுகிறது.

இந்த பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியதும் தான் அவர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ’ஏகே 62′ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.