எளிமையின் மறு உருவம் அஜித் !! நீங்களே பாருங்க வைரல் புகைப்படம் !

0
59
Ak

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது அதே கூட்டணியில் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவுற்றுயுள்ளது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் புனேவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் கலந்து கொள்ளயுள்ளார். இந்நிலையில் அஜீத் இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏகே 61 படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அஜித்துக்கு பைக்கின் மீது அதீத பிரியமுள்ள உள்ளது. வலிமை படத்திலேயே பல பைக் ஸ்டண்ட் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அஜித்துக்கு பைக் பயணம் மிகவும் பிடித்த ஒன்று.

இந்நிலையில் தற்போது அஜித் இங்கிலாந்த் நாட்டில் பைக் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அப்போது அஜீத் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதாவது அஜித் எப்போதுமே எளிமையானவர் என அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் தன்னுடைய பைக்குக்கு அஜித் தானே பெட்ரோல் போடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் வலிமை படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களை ஏகே 61 படம் தட்டி தொங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.