சந்திரமுகி-2 படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது !! அலேக்கா இணையும் அரண்மனை கவர்ச்சி கிளிகள் !!

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் “சந்திரமுகி” இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, நாசர்,வடிவேலு என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தில் வரும் பாடல்கள் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகளின் நடிப்பு என அனைவரையும் வெகுவாக ஈர்த்தது என்றே கூறலாம்.

இதில் அரண்மனை காட்சிகள் வரும்போது அந்த காலத்திலேயே கொலை நடுங்க வைத்தது. மேலும் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வாசு இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். இந்த இரண்டாம் பாகத்தில் நடிகரும் நடன இயக்குநருமான லாரன்ஸ் நடிப்பதாக முன்னதாகவே அறிவிக்கபட்டிருந்தது.

இந்த படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்திற்கான அறிவிப்பும் வெளியானது. அந்த அறிவிப்பில் சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கும் நடிகைகள், நடிகர்கள் குறித்து தேர்வு நடைபெற்று வருகிறதாம். அந்த வகையில் தற்போது படத்தில் கதாநாயகிகளாக நடிக்க நடிகை ஆண்ட்ரியா மற்றும் நடிகை ராசி கண்ணா விடவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இவர்கள் இருவருமே இதற்கு முன்பு வெளியான அரண்மனை 3 படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள். இவர்கள் இந்த படத்தில் நடித்தால் கண்டிப்பாக கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.