உண்மையிலேயே என்னை விட அஜித் தான் அழகு !! விஜய் கூறிய உண்மை !! நீங்களே பாருங்க

0
85

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் கடந்த 2013-ஆம் ஆண்டு தனது பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். இதனால் உற்சாகம் அடைந்த விஜய் ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டனர். அதற்கு விஜய்யுடன் பதில் அளித்து வந்தார்.

அப்போது அஜித் ரசிகர்கள் ஒருவர் தல அஜித்தை பற்றி கூறுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த விஜய் “அஜித் ஒரு அழகான நடிகர்” என்று கூறியுள்ளார். அப்போது செய்த ட்வீட் இப்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏனென்றால், அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் நேற்று வைரலானது. அந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் வெளியீட்டு விஜய் சாரே அஜித் சாரை அழகான ஹீரோ என்று ட்வீட்டை வைரலாக்கி வருகின்றார்கள்.

விஜய் மட்டும் இல்லை, தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் அஜித்தை அழகான ஹீரோ என்றும் மிகவும் நல்ல மனிதர் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாள் என்பதால், கடந்த 2013-ஆம் ஆண்டு ட்வீட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்ததுபோல , இந்த ஆண்டும் விஜயின் பிறந்த நாளிற்கு அதைபோல் ட்வீட்டரில் பேசுவாரா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.